பேரகத்தியத் திரட்டு

ஆசிரியர்: கதிர் முருகு

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 96
ISBN978-93-80217-67-3
Weight100 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உயர்தனிச் செம்மொழி, இளமைத்திறம் உடையதாக விளங்கும் மொழி, தெய்வத்தன்மை பொருந்திய மொழி என்றெல்லாம் ஆன்றோர்களாலும், சான்றோர்களாலும், தமிழ் அறிஞர்களாலும், தமிழாய்வாளர்களாலும், தமிழ்ப்பற்று உடையோர்களாலும், தமிழை வளர்ப்போர்களாலும் சிறப்பிக்கப்படுகின்ற தமிழ் மொழியில் படைக்கப்பட்ட பழமையான இலக்கண நூல் தொல்காப்பியத்திற்கு முந்தையது என்று கருதுகின்ற இலக்கண நூல் அகத்தியம். இதனை அகத்தியர் இயற்றியதாகவும் இது 12 இயல்களாகப் பாகுபடுத்தப்பட்டு 12000 சூத்திரங்கள் கொண்டதாக அமைந்திருந்தது என்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் ஆய்வுக்குரியவை. - நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1912 ஆம் ஆண்டு தமிழ் மொழியைக் காத்து அரிய படைப்புகளை எல்லாம் தமிழுக்கு வழங்க வேண்டும் என்னும் நோக்கில் உரைநூல்களில் மேற்கோளாகக் கிடைத்த சூத்திரங்களை எல்லாம் தொகுத்து களத்தூர் வேதகிரி முதலியார் வெளியிட்டவற்றுக்கு திரு. ச.பவானந்தம் பிள்ளை அவர்கள் பேரகத்தியத் திரட்டு என்னும் பெயரில் உரையுடன் வெளியிட்டுள்ளார்.
அகத்தியம் குறித்தும் அகத்தியர் குறித்தும் பல முரண்கள் காணப்படினும் பழைய நூல்களைத் தேடிப்பிடித்து அவற்றைத் தமிழ் உலகுக்கு வழங்கும் முயற்சியில் தற்போது பேரகத்தியத் திரட்டிற்கு எளிய உரையெழுதி வழங்குகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதிர் முருகு :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :