பெருந்தலைவர் காமராஜர்

ஆசிரியர்: எஸ்.கே. முருகன்

Category
Publication விகடன் பிரசுரம்
FormatPaper Back
Pages 304
First EditionJul 2011
10th EditionMar 2018
ISBN978-81-8476-365-2
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$9       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். காரணம், மக்கள்நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த நேர்மையான அரசியல் துறவி அவர்.காமராஜர், தேசிய அளவில் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவிகளைத் துறந்து, கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்கிற ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதற்கு முன்னுதாரணமாக தானே பதவியிலிருந்து விலகினார்! அவரது செயலைக் கண்ட பிரதமர் நேரு தவித்து, காமராஜரை வழியனுப்ப முடியாமல் நெகிழ்ந்திருக்கிறார்!தன் தங்கையின் பேரன், நல்ல மார்க் எடுத்து மெடிகல் கவுன்சிலுக்குத் தகுதி பெற்றும், அவரை மருத்துவக் கல்லூரிக்குப் பரிந்துரைக்காமல், கோவை விவசாயக் கல்லூரிக்குப் போகச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார் காமராஜர்!இதுபோன்ற, மனதை ஈர்க்கும் சம்பவங்கள் மக்களைக் கவர்ந்ததாலேயே அவர் பெருந்தலைவர் என்று அழைக்கப் பட்டார். கிராமம் தோறும் கல்விக்கூடங்கள், மதிய உணவுத் திட்டம், தொழிலாளர் நலனுக்காக தொழிற்பேட்டைகள், விவசாயம் செழிக்க அணைத் திட்டங்கள் போன்ற அரிய செயல்களைச் செய்ததால் கர்மவீரர் என்று போற்றப்பட்டார்.காமராஜரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, ஆவணங்களின் உதவியுடன் உறுதி செய்துகொண்டு, சுவைபட எழுதியிருக்கிறார் நூலாசிரியர் எஸ்.கே.முருகன்.அரசியல் வாழ்க்கை நடத்துபவர்களும், புதிதாக அரசியலுக்கு வரும் இளைஞர்களும் இந்த நூலைப் படித்தால் காமராஜரைப் போல நேர்மையாளராக வாழ வேண்டும் என்ற வைராக்யம் ஏற்படும்.
என்னுடைய படிப்பு, பெருந்தலைவர் காமராஜரால் தொடங்கப்பட்டது என்பது ஓர் ஆச்சர்ய உண்மை . விருதுநகர், முத்துராமன்பட்டியில் இருக்கும் எங்கள் வீட்டில் இருந்து 100 அடி தூரத்தில் கட்டப்பட்ட 'கி.பெ.பெரியகருப்ப நாடார் ஆரம்பப் பள்ளி' காமராஜர் கரங்களால் திறக்க ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது. காமராஜர் திறக்கும்போது, மாணவர்களால் நிரம்பி இருக்க வேண்டும் என்பதற்காக அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்த பிள்ளைகளை எல்லாம் அந்தப் பள்ளியில் சேர்த்தார்கள். கையால் தலையைச் சுற்றி மறுபக்கக் காதைத் தொட்டால், படிக்கும் வயது வந்துவிட்டது என்று அர்த்தம். பள்ளியின் எதிர்வீடு என்பதால், எனக்கு அதிலும் சலுகை கிடைக்கவே, நான்கு வயதிலேயே முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். காமராஜர், பள்ளியைத் திறந்துவைத்ததும், ஒவ்வொரு மாணவனுக்கும் ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தது புகைமூட்டம் போல் நினைவில் இருக்கிறது.
எஸ்.கே.முருகன் சுமை தூக்கும் தொழிலாளியான எஸ்.கந்தசாமி பெரியாயி தம்பதிக்கு, விருதுநகரில் பிறந்தவர் எஸ்.கே.முருகன். அண்ணன் உத்தம் பாண்டியனையும், அக்கா வாசுகியையும் படிக்க வைக்க முடியாத அளவுக்கு ஏழ்மையில் இருந்த குடும்பத்தில், முதல் நபராக கல்லூரியில் நுழைந்து பி.காம்., பட்டம் பெற்றிருக்கிறார். மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே, மாலைநேரங்களில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிந்திருக்கிறார். ஓய்வு நேரங்களில் வீட்டுக்கு அருகே இருந்த நூலகத்தில் புத்தகங்களைப் படித்து, எழுதுவதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.விருதுநகரில் தட்டச்சு ஏடு நடத்தத் தொடங்கி, பத்திரிகை ஏஜென்ட் ஆக பணியாற்றி, பல்வேறு பத்திரிகைகளில் நிருபராக, உதவி ஆசிரியராகப் பணியாற்றி, ஜூனியர் விகடனில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :