பெரியார் இன்றும் என்றும்

ஆசிரியர்: தந்தை பெரியார்

Category கட்டுரைகள்
FormatHard Bound
Pages 922
ISBN978-81-89867-25-3
Weight1.84 kgs
₹600.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எவனொருவன் தன் நாட்டுக்குத் தொண்டு செய்ய, எந்த ஸ்தாபனத்தின் தேர்தலில் என் அபேட்சகராக நிற்பதனாலும் அவன் பத்தாயிரம் ரூபாய் முதல் மூன்று இலட்சம் ரூபாய் வரையில் செலவு செய்வதுதான் வெற்றி, தோல்வி அடைய முடியும் என்ற நிலை எப்படி யோக்கியமான நிலையாகும்? ஆகவே தேச பக்தியும், கடவுள் பக்தியும் மனிதனை சுயநலஸ்தனாகவும், கண்மூடித்தனமாய்ப் பின்பற்ற வேண்டியதாகவும் செய்கின்றதே தவிர, மனித சமூகத்தின் நாட்டின் முன்னேற்றத்தின் ஏ, பி, சி, டி-யைக்கூட காணச் செய்ய முடிவதில்லை. தேசபக்தி என்கின்ற வார்த்தையே வெள்ளைக்காரன் இராச்சியத்தில் உத்தியோகம் சம்பாதிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதல்லாமல் வேறு எதற்காகவாவது ஏற்படுத்தப்பட்டு - வேறு ஏதாவது பலன் கொடுத்தது என்று யாராவது ஒற்றை விரலை நீட்ட முடியுமா? தேசபக்தியும், கடவுள் பக்தியும் மனித சமூகத்திற்கு என்ன பலனைக் கொடுக்கக்கூடியதாய் இருக்கின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதனும் அவனவன் வாழ்வில் முற்போக்கும். மாறுதலும் அடைந்துகொண்டே வருகின்றான். இதற்காகத் தனி இலட்சியம் தேவையில்லை. மரக்கட்டைபோல் உணர்ச்சியற்றவனாய் இருந்தாலும் அவன்கூட காலப்போக்கில் தானாகவே மாறுதலும் முற்போக்கும் அடைந்துதான் தீருவான். ஆனால், அப்படிப்பட்ட விஷயங்களில் நம்போன்றவர்கள் செய்யும் விசேஷகாரியம் என்னவென்றால், எப்படிப்பட்ட மாறுதல் - எப்படிப்பட்ட முற்போக்கு அவசியம் என்பதில் செலுத்தும் கவனமேயாகும். கலியாணம், இழவு, வாழ்வு முதலிய துறைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் சுயமரியாதை இயக்கந்தான் என்று முழுவதும் கூறுவது தகாது. காலதேசவர்த்தமானம் மக்களை அப்படிக் காலத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளச் செய்கின்றது. அதில் சிலவற்றிற்குச் சுயமரியாதை இயக்கம் துணை புரிந்தது என்று சொல்லலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தந்தை பெரியார் :

கட்டுரைகள் :

விடியல் பதிப்பகம் :