பெண் குலத்தின் வெற்றி

ஆசிரியர்: அமரர் கல்கி

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 168
Weight200 grams
₹75.00 ₹60.00    You Save ₹15
(20% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் செய்திருக்கும் தொண்டு நிறைபோட்டு அளவுகட்ட முடியாதது. அவருடைய தொண்டுக்கு இணை அவருடைய தொண்டுதான். உவமை சொல்வதற்கு வேறு கிடையாது.
பத்துப்பாட்டு, புறநானூறு முதலிய சங்க நூல்களையும், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவிய நூல்களையும், இன்னும் எண்ணற்ற தமிழ் நூல்களையும் கரையான் வாயிலிருந்து அய்யர் அவர்கள் தப்புவித்தார்கள். இரவெல்லாம் தூங்கா விளக்கு வைத்துத் தூங்காமல் கண்விழித்துப் பாடபேதம் பார்த்துப் பிழை திருத்தி மிகச் சிறந்த முறையில் அச்சிட்டுப் பதிப்பித்தார்கள்.
இந்த அரும் பெரும் தொண்டைக்காட்டிலும் அய்யர்வாள் செய்த மிகப் பெரும் தொண்டு என்ன வென்றால், தற்காலத்துக்குரிய தமிழ் வசன நடை எப்படியிருக்க வேண்டும் என்பதை ஐயமறக் காட்டியதுதான். சங்கநூல்களைப் பதிப்பித்த அய்யர்வாள் இறையனார் அகப்பெருள் உரையின் வசனநடையைப் பின்பற்றி எழுதவில்லை. சங்கப் புலவர்கள் கையாண்ட சொற்களை யெல்லாம் தமது தமிழ் வசன நடையில் அவர் புகுத்தவில்லை . தற்காலத் தமிழ் மக்களின் நாவில் நடமாடும் சொற்களைக் கையாண்டு எளிமையான வசன நடை எழுதினார்.இவ்விதமாகத் தமிழும் தமிழகமும் அய்யர் அவர்களுக்கு எத்தனையோ விதத்தில் கடமைப்பட்டிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :