பெண்ணே நீ வாழ்க...

ஆசிரியர்: சுகி சிவம்

Category கட்டுரைகள்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 128
First EditionDec 2008
9th EditionAug 2017
ISBN978-81-8345-109-3
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஒரு சுவையான கதை. குழந்தைகள் கதை மாதிரி இருக்கும். ' இருக்கட்டும். படியுங்கள்.இரண்டு அரசர்கள் போரிட்டார்கள். தோற்ற அரசரைப் பார்த்து போரில் வெற்றிபெற்ற அரசர் சொன்னார் “உங்களை என்னால் கொல்ல முடியும். ஆனாலும் நீங்கள் மிகப்பெரிய அறிவாளி. அதனால் கொல்லாமல் உங்கள் அறிவைப் பயன்படுத்த விரும்புகிறேன். எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு விடை தெரிய வேண்டும். நான் ஒரு பெண்ணை நேசிக்கிறேன். அவளை மணக்க விரும்புகிறேன். அவளோ “ஒரு பெண் உலகிலேயே அதிகம் விரும்புவது எது?” என்பதை நான் அறிந்து சரியாகச் சொன்னால் மட்டுமே என்னை மணப்பதாக நிபந்தனை விதித்துவிட்டாள். நான் சரியாகச் சொல்லா விட்டால் திருமணம் நடக்காது.

காதல் வயப்பட்ட ஆண் ஒருவன் தன் இனிய துணையிடம், “பெண்ணே உன்னை ஏன் இவ்வளவு அழகுள்ளவளாகக் கடவுள் படைத்திருக்கிறார்?'' என்று கேட்டான். "அப்போதுதான் உன்னைப் போன்ற ஆண் ஒருவன் என்னைக் காதலிப்பான் என்கிற காரணத்தால்” என்று பதில் சொன்னாள் காதலி. அடுத்த விநாடி ஆணுக்கே உரிய ஆணவத்துடன், “இவ்வளவு அழகாகப் பெண்ணைப் படைத்தவர் ஏன் இப்படி அடிமுட்டாளாகப் படைத்து விட்டார்?' என்று கேலி செய்தான். "நாங்கள் முட்டாளாக இருந்தால்தானே உன்னைப் போன்ற ஒருவனையும் பெண்களால் நேசிக்க முடியும்” என்று பதிலடி கொடுத்தாள் அவள்.ஒவ்வோர் ஆணும் பெண்ணைவிட தான் அதிக அறிவாளி என்கிற மதர்ப்பில்தான் இருக்கிறான். இது உண்மை அல்ல. ஒரு பிழையான புரிதல்.

பெண்களின் பெருமையை விளக்கி சாதனையாளர்களாக அவர்களை உயர்த்தும் வண்ணம் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் நூல் வடிவமே 'பெண்ணே நீ வாழ்க',சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் எளிமையான சொற்களால் கோக்கப்பட்ட பெண்மை பற்றிய புதிய பார்வை அற்புதமான படைப்பு இந்நூல் என்பதில்ஐயமில்லை.இந்நூல் பெண்களைப் பதுமைகளாகப் பார்க்கும் அறிவிலி ஆண்களின் எண்ணத்தைத் தகர்த்தெறியும். பெண்களின் ஆற்றல், அறிவுத்திறன், கல்வி, கலை என்கிற பன்முக ஆற்றலும் இப்படைப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் ஜொலிப்பதைக் கண்டுணர முடியும்.இந்நூலின் முகப்பைச் சிறப்பான முறையில் அமைத் தளித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

கட்டுரைகள் :

கவிதா பதிப்பகம் :