பெண்களுக்கான உடைகள்

ஆசிரியர்: ஆர் .எஸ் .பாலகுமார்

Category சுயமுன்னேற்றம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 360
Weight300 grams
₹200.00 ₹170.00    You Save ₹30
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புதிதாக தையற் தொழிலைக் கற்று மேன்மையடைய விரும்புவோருக்கும், தொழில் முறையில் ஈடுபட்டிருக்கும் பல தையற் கலைஞர்களுக்கும் உடனடி உதவும் பாடங்களாக வடிவமைத்துள்ளேன். உலகில் சிறந்தது தையற் கலையே என்கிற கருத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை பெற்றிருக்கின்றேன். ஆடை இல்லாதவன் அரை மனிதன். இயற்கையில் அழகிலார் எனினும் செயற்கையில் அழகு செய்வது தையற்கலை என்கிற பாவேந்தர் பாரதிதாசனின் செம்மை வரிகளையும் தற்போதைய பாட வகுப்புகளில் மாணவி மாணவியர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை பறைசாற்றி வருவதில் பேரானந்தம் உண்டு. இன்றைக்கு பேஷன் டெக்னாலஜி பட்டயப் படிப்பினையும், பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலுவோருக்கும் தையற்கலையை எளிதில் கற்றுத் தெளிவடையும் நோக்கில் இந்த நூலினை படைத்துள்ளேன்.
தற்போதைய ஏற்றுமதி உடுப்புத் தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றிவரும் மாஸ்டர்களுக்கும் ஆபரேட்டர்களுக்கும் தையற் கலை வெட்டும் தொழில் முறையானது அவசியம் தெரிந்திருப்பின் வாழ்வின் முன்னேற்றம் தானாக வந்தடையும். எனவே சுலபமுறையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலினை படித்து பயனடையுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர் .எஸ் .பாலகுமார் :

சுயமுன்னேற்றம் :

மணிமேகலைப் பிரசுரம் :