பூக்குழி

ஆசிரியர்: லக்ஷ்மி

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 232
First EditionApr 1980
7th EditionJan 2017
Weight200 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹110.00 ₹104.50    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அமரர் கல்கி தமிழகத்துக்குக் கண்டு பிடித்துக் கொடுத்த எண்ணற்ற எழுத்தாளர்களுள் லக்ஷ்மியும் ஒருவர். "நான் முதன் முதலில் ஒரு சிறுகதை எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். அதைப் படித்து விட்டு கதை பிரசுரமாவதற்கு முன்பே ஒரு பாராட்டுக் கடிதம் எழுதினார் கல்கி. அந்தக் கடிதம் தான் என்னை மேன்மேலும் எழுதத் தூண்டியது'' என்று, லக்ஷ்மி கூறியிருக்கிறார்.
இந்த நன்றி உணர்வு காரணமாக, “கல்கி பத்திரிகைக்கு ஒரு நாவல் எழுதித்தரவேண்டும்'' என்று சென்ற ஆண்டு நான் கேட்ட போது, லக்ஷ்மி 'ஆகட்டும்'' என்றோ "யோசிக் கிறேன்'' என்றோகூறவில்லை . "அது என்கடமையல்லவா?'' என்றார். "கல்கி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அவரே ஆசிரியராக இருந்து நடத்திய பத்திரிகை, அவருடைய மகன் வந்து கேட்கிறீங்க; இல்லை என்பேனா?'' என்றார்.
நான் நெகிழ்ந்து போனேன். மேலே குறிப்பிட்ட ஒரு நிமிட உரையாடலின் விளைவுதான் ''பூக்குழி''. தொடர் கதையாகப் பிரசுரிக்கப்பட்ட போது, கல்கி வாசகர்களிடையே அபரிமிதமான வரவேற்பைப் பெற்றது.
முதல் கதைக்கு ஆனந்த விகடன் ஆசிரியரின் பாராட்டைப் பெற்றபின், அந்தப் பத்திரிகையில் ஏராளமான சிறு கதைகளும் நீண்ட பல தொடர்கதைகளும் எழுதினார் லக்ஷ்மி. இதற்கிடையில் கல்கி தமது சொந்தப் பத்திரிகையை ஆரம்பித்தார். தென் ஆப்பிரிக்காவிலிருந்து தமது தொடர் கதையின் அத்தியாயங்களை விகடனுக்கு அனுப்புவார் லக்ஷ்மி.

உங்கள் கருத்துக்களை பகிர :
லக்ஷ்மி :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :