பூகம்பமும் சுனாமியும்
ஆசிரியர்:
ஏற்காடு இளங்கோ
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1807-3765-6875-2343
{1807-3765-6875-2343 [{புத்தகம் பற்றி இப் பிரபஞ்சம் நாளுக்குநாள் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்றும், பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பம் ஒரு பகுதி என்றும் சூரியக் குடும்பத்தின் கோள்களில் ஒன்றே பூமி என்றும் விளக்கப்படுகிறது. சூரியனை மையமாகக் கொண்டு சூரியக் குடும்பத்தின் கோள்கள் சுழல்கின்றன என்பர். பூமியானது சுமார் 4546 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்றும் பூமி முழுமையாக ஒரு வடிவம் பெற சுமார் பத்து முதல் இருபது மில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்றும் புவியியலாளர்கள் புகல்கின்றனர். பூமியில் உயிரினங்கள் தோற்றம் பற்றியெல்லாம் பல்வேறு வகையான ஆய்வுகள் உள்ளன. பூமி பல தட்டுகளை உடையது என்பர்.
<br/> பூமித் தட்டுகள், பாறைத் தட்டுகள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன என்றும், பாறைத்தட்டுகள் நகரும் நிலையில் ஒன்றோடொன்று மோதிக் கொள்கிற போது பூகம்பம் ஏற்படுகிறது என்றும், பூமியைச் சுற்றி இருக்கின்ற நீர்ப் பரப்பில் ஏற்படுகின்ற பெரும் நீர்ப் பெயர்ச்சியே சுனாமி என்னும் ஆழிப் பேரலை அல்லது கடற்கோள் என்றும் அழைக்கப்படுகின்றன என்பன போன்ற பல நுட்பமான அறிவியல் கருத்துகள் தெளிவாகவும், எளிமையாகவும் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப்பட்டிருப்பது இந்நூலின் தனித்தன்மை எனலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866