புவிப்படவியல்
ஆசிரியர்:
பேரா.ச.சேதுராக்காயி
விலை ரூ.475
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+?id=1209-0672-9959-8520
{1209-0672-9959-8520 [{புத்தகம் பற்றி புவியியல் என்பது நில, நீர், வாயுக்கோளங்களைப் பற்றியும், மனிதன் எவ்வாறு இக்கோளங்களோடு இணைந்து அல்லது இவ்வியற்கைக் காரணிகளை, தம் முயற்சியால் இணையச்செய்து வாழ்ந்து வருகிறான் என்பதைப் பற்றியும் விளக்குகின்ற ஓர் இயலாகும். பல கோளங்களைப் பற்றி இவ்வியலில் விளக்கப்பட்டிருப்பினும், இவ்விளக்கங்களுக்கு உறுதுணையாகத் திகழ்வன புவிப்படங்கள் ஆகும். இவ்வியலின் அடித்தளமாக அல்லது அடிப்படையாகத் திகழ்வது இப்புவியாகும். மற்ற அறிவியல் சோதனைகளை சோதனைக்கூடத்தில் செய்து பார்ப்பது போல புவியியல் சோதனைகளை நாம் செய்து தெளிவு பெற முடியாது. காரணம் புவி முழுவதுமே சோதனைச் சாலையாகும். இப்பரந்த புவிப்பரப்பினை ஓரளவு தெளிவாக, கண்கூடாகப் பார்ப்பதற்குப் பயன்படுபவை தான் 'புவிப்படங்கள்' (MAP) ஆகும். புவிப்படங்களின் உதவியோடுதான் புவியியலை மாணவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ஆகவே நாம் புவிப்படவியலை புவியியலின் அடிப்படை இயல் என்றே கூறலாம்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866