புற்றில் உறையும் பாம்பு

ஆசிரியர்: வே.சபாநாயகம்

Category சிறுகதைகள்
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaperblack
Pages 156
First EditionJan 2015
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$5.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

கல்வித்துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றி, '1993ல் பணி நிறைவுபெற்று, தற்போது விருத்தாசலத்தில் வாழ்பவர்.வே.சபாநாயகம் 'பள்ளிப்பருவம் முதலே எழுதி வரும் இவர், தமிழகத்தின் முன்னணிப் பத்திரிகைகளிலும், இலக்கிய இதழ்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள், குறுநாவல்கள், நூல் விமர்சனங்கள் எழுதியுள்ளார். இதுவரை இவர் எழுதிய சிறுவர் நூல்கள், நாவல், திறனாய்வு நூல்கள், சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் 28 வெளியாகி உள்ளன. கணையாழி, தீபம், ஞானரதம் ஆகிய இலக்கிய இதழ்களின் தொகுப்புகளை வெளியிட்டதன் மூலம் இலக்கிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
குழந்தை இலக்கியத்துக்கான A.V.M அறக்கட்டளையின் தங்கப் பதக்கம், தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, வள்ளியப்பா சிறுகதை விருது, திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு, பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு என பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர். இவரது நாவல் ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1994ல் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூபாய் பரிசு பெற்றது. ஆனந்தவிகடன் நடத்திய ஜாக்பாட் சிறுகதைப் போட்டி பரிசு பெற்றவர். தமிழரசி' இதழின் மாவட்ட சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். கணையாழி இதழின் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டி யில் 3 முறை பரிசு பெற்றவர். ஒவியம், ஒளிப்படம் மற்றும் பேச்சுக்கலையிலும் வல்லவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :