புறநானூறு - தமிழர் நாகரிகம்

ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்

Category ஆய்வு நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 168
ISBN978-93-80218-63-2
Weight200 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'புறநானூறு - தமிழர் நாகரிகம்' என்னும் இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு பேறு. தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு. அப் புறநானூற்றினின்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நவமணிகளாக 34 பாடல்களைத் தேர்ந்தெடுத்து மணி மாலையாக்கித் தந்திருக்கிறார் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அவர்கள். மென்மையும், வன்மையும், தண்மையும், திண்மையும் விரவி நடக்கும் வகையில் பாடல்களைத் தேர்ந்தெடுத்து சீர்பிரித்து எளிமைப்படுத்தி சிறுகதைபோல எடுத்துச் சொல்லியிருக்கும் பாங்கு இந்நூலில் முன்மாதிரியாகத் திகழ்கிறது. இந்நூல் 'இலக்கியச் சோலை' என்னும் பெயரில் பல்லாண்டுகளுக்கு முன் வெளியாகியுள்ளது.
செய்திகளைத் தொகுத்தல், செய்திகளைத் தொடர்பு படுத்துதல், அதற்கேற்ப பாடலின் கருத்தகளைத் தெளிவு படுத்துதல், பாடலை எடுத்துக் காட்டுதல் என்கிற வகையில் அமைக்கப் பட்டுள்ள திறம் கற்போர் உளவியல் மனப்பான்மை அறிந்து உணர்த்தும் உயர்வு மகிழத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாமி. சிதம்பரனார் :

ஆய்வு நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :