புரோகித்-இன் லேப்டாப்பில் இருந்தது என்ன?

ஆசிரியர்: மு.குலாம் முஹம்மத்

Category இஸ்லாம்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 27
First EditionMar 2016
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹20.00      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here


புரோகித்- இன் லேப்டாப்......?
கலோனல் பிராஷாந்த் புரோகித், நமது இராணுவத்தில் பணி புரியும் ஓர் அதிகாரி. அதிலும், இராணுவத்தின் உளவுப் பிரிவில் வேலை பார்த்தவர். அதே நேரத்தில் அபிநவ் பாரத் என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பிலும் செயல்வீரராக இருந்தவர். இராணுவ செலவிலேயே இஸ்ரேல் சென்று இந்து ராஷ்டிராவுக்கான அடிப்படை வேலைகளைச் செய்தவர். இஸ்ரேலின் தலைநகரான “டெல் அவீவ் இல், இந்து ராஷ்டிராவுக்கான தலைமையகத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். இந்தத் தலைமையகம் இன்றும், இஸ்ரேலில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் மராட்டிய தீவிரவாத படையின் ATS : Anti Terrorism Squad, தலைவர் ஹேமந்த் கர்கரே கண்டுபிடித்தார். அம்பலப்படுத்தினார். இதற்கான ஆதாரங்கள் புரோகித் - இன் லேப்டாப்பை (மடி கணிணியைச்) சோதனை செய்த போது கிடைத்தன. நீதிமன்ற சாட்சியங்களுள் இந்த லேப் டாப்பில் இருந்தவை முக்கியமானவை. அவற்றை நீதிமன்ற ஆவணங்களி லிருந்தே தொகுத்து தந்திருக்கின்றோம். இப்போது இவர் சிறையிலிருக்கின்றார் பலப் பல குற்றங்களை புரிந்ததால். ஆனாலும் அவருக்கு அரசு, ஊதியம் வழங்கிக் கொண்டே இருக்கின்றது .......? படியுங்கள்! நாடு எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!பாசிசத்தை மாய்க்கவும் - - பாரதத்தை பாதுகாக்கவும் முன் வாருங்கள்
இஸ்ரேலின் தலைநகர் டெல் அவீவ்-இல் இந்து ராஷ்டிராவின் அலுவலகத்தையும் திறந்து வைத்திருந்தார். இந்த அரசுக்கு Hindu Rashtra in Exile எனப்பெயர் வைத்திருந்தார். அதாவது இந்தியாவுக்கு வெளியே இருந்து செயல்படும் இந்து ராஷ்டிரா எனப் பெயர் வைத்தார். இவற்றையும் இன்னும் பல உண்மைகளையும், புரோகித்-இன் (லேட்டாப்பில்) மடிகணினியிலிருந்து எடுத்தார், ஹேமந்த் கர்கரே! அவற்றின் அடிப்படையில் ஒரு குற்றப்பத்திரிக்கையை, மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். புரோகித்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தார்.
அந்தக் குற்றப்பத்திரிக்கையை பல மனித உரிமை ஆர்வலர்கள் பெற்றார்கள். அதில் ஒரு பிரதியை நமது பத்திரிகை வைகறை வெளிச்சத்திற்கும் அனுப்பித் தந்தார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :