புயலிலே ஒரு தோணி

ஆசிரியர்: ப. சிங்காரம்

Category நாவல்கள்
Publication தமிழினி
FormatHardcover
Pages 416
First EditionJan 1999
5th EditionJan 2015
ISBN978-81-87641-00-2
Weight600 grams
Dimensions (H) 24 x (W) 15 x (D) 3 cms
₹360.00 $15.5    You Save ₹18
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866''டேய், நீ அசல் பூர்ஷ்வாப் பயல் - செக்குமாடு... காதல், கல்யாணம், கற்பு, பிள்ளை , சொத்து. பரம்பரை! | டாமிட் ஆல்." மேசையில் ஓங்கிக் குத்தினான். பீங்கான் தட்டுகளும் கோப்பைகளும் அலறிக் குதித்தன. ''எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும். இது யார் வாக்கு, தெரியுமா? தாயுமானவர்! 'தீயினிடை வைகியும் தோயமதில் மூழ்கியும், தேகங்கள் என்பெலும்பாய்த் தெரிய நின்றும், சென்னிமயிர்கள் கூடாக் குருவி தெற்ற வெயிலூடிருந்தும், வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும்' உண்மை தெரிய முயன்ற அறிஞர்களில் ஒருவர்.'' ''ஓஹோ! நீரிலும் நெருப்பிலும் புகுந்து பார்த்தவர் உண்மையை அறிந்தாரோ?" ''யான் அறியேன். எனக்குத் தெரிந்தவரையில், மனிதன் அறிய விழைவது ஆனால் அறிய இயலாதது உண்மை . அறியப்படுவது அழிவுறுமாதலின் அழிவற்றது. அறிவிற்கு அப்பாற்பட்டதாயிற்று." "அறிவிற்கு அப்பாற்பட்டதை அது அவ்வாறானதென்று எவ்வாறு அறிவது?" "அறிந்தது எது, அறியாதது எது என்பதை அறிவதே அறிவின் இலக்கணம்."

உங்கள் கருத்துக்களை பகிர :
ப. சிங்காரம் :

நாவல்கள் :

தமிழினி :