புனைவும் நினைவும்

ஆசிரியர்: சமயவேல்

Category சிறுகதைகள்
Publication மணல் வீடு வெளியீடு
FormatPaper Pack
Pages 135
First EditionDec 2018
Weight250 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 2 cms
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஊரின் கண்மாய், புறப்படத் தயாராக நிற்கும் புளியமர ரயிலாக நீண்டு கிடக்கும் கண்மாய்க்கரை, வாருணிகள், கிணறுகள். ஆலமரங்கள். பழந்தின்னி. வெளவால்கள் நிரம்பிய அத்தி.அரசமரங்கள், பால் வடியும் முதிர் வேப்பங் கன்னிகள், பாம்புகள் நெளியும் கோவில்கள், பேய்கள் தெலாப்போட்டு இரைக்கும் அழிந்த நந்தவனங்கள், மூக்கையாரெட்டியார் போன்ற நூறு வயதை எட்டிய. எனது மூத்த நண்பர்கள், நெஞ்சுக்குள் மத்தாப்பு கொளுத்தும் பெரிய கார்த்திகை, இவர் முழுதும் கூடி ஆலமரங்களின் அடியில் அமர்ந்து பலவகைக் கஞ்சிகளைக் குடிக்கும் வடக்கத்தியம்மன் கஞ்சி, சேத்தாண்டி வேஷம் போட்டு ஆஹோ. அய்யாஹோ போகும் உத்தண்டசாமி கோவில் பங்குனிப் பொங்கல் போன்ற எங்கள் எளிய திருவிழாக்கள் என்று எவ்வளவு ஞாபகங்கள்? இருபது வயது வரையிலான எனது பால்யத்தையும் இளம்பருவத்தையும் கட்டமைப்பதில், ஒரு சமூக நானை எனக்குள் வளர்த்தெடுப்பதில் எனது பாருக்குப் பெரும்பங்கு இருந்திருக்கிறது. வாழ்வு மீதான பெருவிருப்பம், பொருளாதாரம் மற்றும் சாதியம் முதலான எல்லாவகையான ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்துக் கட்டவேண்டும் என்ற பெரும் லட்சியம், புத்தகங்களைத் தேடித் தேடி வெறி பிடித்து அலைந்த இனம் புரியாத அகத்தாகம், சொந்தக் குடும்பத்தின் கடைசி உத்திரங்களும் கரையான் அரித்துக்கொண்டிருந்த சோகம் என பெரும் கொந்தளிப்பு மிக்க எனது இளமையை உயர்தான் தாங்கிக்கொண்டது. எனவேதான் போரின் மீதான மாயக்காதல் இன்றும் முடிந்தபாடில்லை.

எனது மனதுக்கு நெருக்கமான நண்பர் அருண், மென்பொருள் துறையில் இருந்து தனது வேலையை விட்டுவிட்டு மின்னிதழ், இலக்கியம், திரைப்படம், கதை சொல்லி பதிவு செய்தல் எனப் பலவகையிலும் இயங்க ஆரம்பித்தார். அவருடைய "கூடு" மின்னிதழ் வெளிவரத் தொடங்கியபோது அடிக்கடி தொலைபேசியில், நாங்கள்உரையாடத் தொடங்கினோம். எங்கள் கிராமத்தைப் பற்றிய ஒரு தொடரை எழுதுகிறேன் என்று உறுதியளித்துவிட்டேன். ஆனால் நான் 'கறுப்புப் பாலைவனம்' என்ற தலைப்பை மட்டும் கொடுத்துவிட்டு ஒன்றுமே செய்யாமல் இருந்தேன். நிறைய தொலைபேசி அழைப்பு களுக்குப் பிறகு ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். பிறகு ஒவ்வொரு கட்டுரையையும் அவர் அடிக்கடி ஞாபகப்படுத்தி எழுத வைத்தார். கட்டுரைகள் வெளியானபோது அவற்றுக்குக் கிடைத்த பின்னூட்டங்கள் மிகுந்த உற்சாகத்தை அளித்தன. 2009, 2010களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் இன்னும் ஈரத்துடன் இருப்பதாலும், சாதிய உரையாடல்களில் எனது அனுபவம் சார்ந்த சில அவதானிப்புகள் முக்கியமானவை எனக் கருதுவதாலும் இதை ஒரு சிறிய நூலாக வெளியிட விரும்பினேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமயவேல் :

சிறுகதைகள் :

மணல் வீடு வெளியீடு :