புத்தரும் அவர் தம்மமும்
₹500.00 ₹450.00 (10% OFF)

புத்தரும் அவர் தம்மமும்

ஆசிரியர்: டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

Category வாழ்க்கை வரலாறு
Publication பெரியார்தாசன் நினைவு அறக்கட்டளை
FormatHardbound
Pages 501
Weight1.20 kgs
₹460.00 ₹414.00    You Save ₹46
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 888662500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் துக்கமான சாதீய அடுக்குமுறையை உள்ளடக்கிய பார்ப்பனீய சதுர்வருணக் கோட்பாட்டையும் (நால்வருணக் கோட்பாடு), அவற்றை நியாயப்படுத்த உண்டாக்கப்பட்ட கடவுள், கர்மவிதி, ஆன்மா , மறுபிறப்பு, யாகம்பலிகொடுத்தல் ஆகிய மூட நம்பிக்கைகளையும் முதன்முதலாக எதிர்த்து சாட்டையை சுழற்றிய மாபெரும் புரட்சியாளர் புத்தர் என்பதை ஆதார பூர்வமாக தர்க்கரீதியான விவாதங்களோடு ஆணித்தரமாக நிருவியுள்ளார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தனது இறுதிப் படைப்பான Buddha And His Dhamma என்ற நூலில்.
இந்நூல் பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களால் தமிழில் ‘புத்தரும் அவர் தம்மமும்' என மொழிபெயர்க்கப்பட்டு 1994 - ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பவுத்தம் பற்றிய இவ்வழகான தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்திருப்பது அறிந்து தைவான் நாட்டிலுள்ள (The Corporate Body Of the Buddha Educational Foundation) என்ற அமைப்பு இந்நூலை மறுபதிப்பு செய்து 60000 பிரதிகள் வெளியிட்டு மக்களிடம் இலவசமாக சேர்ப்பித்தது.
தற்பொழுது இந்நூலின் பிரதிகள் இல்லை என்பதால் ஆய்வாளர்களும், இளைய தலைமுறையினர் பலரும் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு நூல் கிடைக்குமா?' என்று மிகுந்த ஆவலுடன் தொடர்ந்து விசாரித்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று ‘புத்தரும் அவர் தம்மமும்' என்ற இந்நூல் மூன்றாம் பதிப்பாக சென்ற ஆண்டு (2019) வெளியிடப்பட்டது பலரும் இந்நூலை ஆர்வமாக வேண்டுவதால் மீண்டும் நான்காம் பதிப்பு இவ்வாண்டு (2020) வெளியிடப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் :

வாழ்க்கை வரலாறு :