புத்தரும் அவரது தம்மமும்

ஆசிரியர்: டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

Category தத்துவம்
Publication கருத்து - பட்டறை வெளியீடு
FormatHard Bound
Pages 544
Weight1.03 kgs
₹600.00 ₹582.00    You Save ₹18
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்" என்று அம்பேத்கர் 1935 ஆம் ! ஆண்டு சூளுரைத்த இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவர் புத்தத்தை தழுவினார். இக்காலக்கட்டத்தில் சமூக சமத்துவத்தை உருவாக்கும் சமயம் எது என்பதற்கான அவரது தேடுதல் முயற்சிகள் விரிவானவை.
இந்நூலில் மிகக் குறைவான இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அம்பேத்கரின் கவனத்தில் கிறித்தவமும். இசுலாமும் இருந்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. ஆனால், அவை உட்பட வேறு எந்த மதத்தைக் காட்டிலும் புத்தரால் முன்மொழியப்பட்டு பின்பற்றப்பட்ட புத்தரின் போதனைகளே. புத்த தம்மமே சமூக சமத்துவத்திற்கும், அறிவுணர்வுக்கும். அறவுணர்வுக்கும் பொருத்தமானது என்பதை அவர் கண்டறிந்தார். புத்தருக்கு பின்னால் உருவான தேரவாதம், மகாயானம் போன்ற பிரிவுகளை நிராகரித்து நவயானம் அல்லது நவபவுத்தம் எனும் கோட்பாட்டை தனது இறுதி நாட்களில் அம்பேத்கர் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைப் பாதையாக முன்மொழிந்தார். "புத்தரும் அவரது தம்மமும் - எனும் இந்நூல் அம்பேத்கர் முன் வைத்த புத்தத்தின் விளக்க கையேடாக. அமைகிறது. அம்பேத்கர் விரும்பிய "சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம்" ஆகிய கோட்பாடுகளை புத்தரின் போதனைகளில் அம்பேத்கர் இனம். கண்டார். அதை பிறருக்கும் தெரிவிக்கவே இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் :

தத்துவம் :

கருத்து - பட்டறை வெளியீடு :