புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்

ஆசிரியர்: தி.கு.இரவிச்சந்திரன்

Category ஆய்வு நூல்கள்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaperback
Pages 184
First EditionJan 2017
ISBN978-93-92213-27-4
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹140.00 $6    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


தி. கு. இரவிச்சந்திரன் உளப்பகுப்புச் சிந்தனையாளர். ஃப்ராய்ட், யூங், லக்கான் வழி விமர்சகர். மொழிபெயர்ப்பாளர், கவிஞர். எட்டு உளவியல் நூலாசிரியர். இலக்கியம், சமூகம், மானிடவியல், நாட்டுப்புறவியல் ஆகியவை இவரது களங்கள். தற்போது அரசு கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்.புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும் இலக்கிய வாசிப்பு ஒரு ரசனை என்றால் இலக்கியத் திறனாய்வு | இன்னொரு ரசனை. இதில் பல அணுகுமுறைகள் உள்ளன. என்றாலும், ஒரு சில மட்டும் நல்ல ரசனையை வழங்கி வருகின்றன. அவற்றுள் , உளப்பகுப்பாய்வும் ஒன்று. ஃப்ராய்ட் தோற்றுவித்த இந்த அணுகுமுறை, யூங்கிற்கும் லக்கானுக்கும் தூண்டுகோலாக அமைய, புதிய அணுகுமுறைகளை இவர்கள் கண்டனர். தற்போது, ஃப்ராய்ட், யூங், லக்கான் அணுகுமுறைகளே உளப்பகுப்புத் திறனாய்வுலகில் பெருவழக்காக உள்ளன. புதுமைப்பித்தன் தமிழின் உன்னதப் படைப்பாளி. இக்காலத்துக்கு ஏற்ற சிறுகதைகள், பலவற்றை அன்றே கண்டவர். ஆழத்து வாசிப்புக்கும் திறனாய்வுக்கும் ஒத்தமைந்த படைப்புகள் இவரது சிறுகதைகள். அவற்றுள் கபாடபுரம் புனைவாக்கத்தின் உச்சம் எனலாம். சர்ரியலிசம் எனப்படுகின்ற , கனவோடை உத்தியில் பிறந்த இக்கதையை ஃப்ராய்ட், யூங், லக்கான் பார்வையில் முப்பரிமாண விமர்சனத்தை இந்நூல் முன்வைக்கிறது. |உளவியல் ஆழம் மிக்க கபாடபுரம் எனும் கதை வாசகனுக்குப் புதிய , அனுபவத்தைத் தருவதுபோல் இந்நூல் இன்னொரு புதிய அனுபவத்தைத் தரும்.

உங்கள் கருத்துக்களை பகிர :