புதுமைப்பித்தன் என்ற மகாகலைஞன்

ஆசிரியர்: மா.பாலசுப்ரமணியன்

Category கவிதைகள்
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaper Back
Pages 160
First EditionJan 2007
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
முதன் முதலாக நான் புதுமைப்பித்தனைச் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. 1926 இல் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் கடைசி வாரம் என்று நினைக்கிறேன்- பல்லும் பவிஷமாக, திருநெல்வேலி அப்பா(?) - அது திருநெல்வேலி ஜிப்பாதானா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. - இப்போது சிதம்பர ரகுநாதனும் அதே மாதிரி ஜிப்பா அணிவதை நான் பார்க்கிறேன் - கடகட வென்று கல்லை எதோ பித்தளைப் பாத்திரத்தில் உருட்டிவிட்டது போன்ற அடித் தொண்டையிலிருந்து வந்த ஒரு சிரிப்பு.''உங்கள் கதை 'சிற்பியின் நரகம் நன்றாக இருக்கிறது,'' என்று நான் சொன்னவுடன், ''அப்படித்தான் இருக்கும், ராசாவே! என் கதைகள் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்!” என்று, அகங்காரமில்லாத ஒரு நிச்சயத்துடன் அவர் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. என் கையில் 'காரல்சப்பக்' என்கிற ஸெக்கோஸ்லோவேக்கிய நாவலாசிரியர் எழுதிய நாவல் இருந்தது. 'அப்சலூட் அட்லார்ஜ்' என்கிற நாவல் என்று எண்ணுகிறேன். “நான் படித்துப் பார்க்கிறேன்,' என்று என் அனுமதியைக் கேட்காமலே, என் புஸ்தகத்தை எடுத்துக் கொண்டுவிட்ட அவருடைய நெருக்கமும் எனக்குப் பிடித்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
மா.பாலசுப்ரமணியன் :

கவிதைகள் :

வ.உ.சி.நூலகம் :