புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு

ஆசிரியர்: முனைவர் க.பஞ்சாங்கம்

Category கட்டுரைகள்
FormatPaperback
Pages 414
ISBN490
Weight150 grams
₹250.00 $10.75    You Save ₹12
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereஇலக்கிய, இலக்கணங்கள் என்பவை சமூகத்தை, மனித மனங்களைக் கட்டமைக்கும் ஒரு அதிகார நிறுவனமாக வரலாற்றில் இயங்குகின்றன. இந்தப் பின்னணியில் தமிழ் இலக்கிய இலக் கணங்கள் அரசு, சாதி, சமயம், ஆணாதிக்கம் முதலிய பல்வேறு அதிகாரக் கட்டமைப்புகளின் பகுதியாகவும் இவற்றுக்கு எதிர்நிலையிலும் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்பதை நுட்பமாக எடுத்துரைக்கிறது க.பஞ்சாங்கத்தின் ‘புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு’.

ஒவ்வொரு இலக்கிய வகைமைப் போக்குக்கும் பின்புலங்களுடனும் திறனாய்வுடனும் இந்நூல் அமைந்திருக்கிறது. திறனாய்வு நோக்கில் விரிவாக எழுதப்பட்ட முதன்மையான இலக்கிய வரலாறு என்றும் இதைக் கூற முடியும். எந்த ஒரு இலக்கியத்தையும் இன்றைய சமகாலப் பார்வை யுடனும் நவீனக் கோட்பாட்டுப் பார்வையுடனும் இணைத்து இன்றைக் கான இலக்கியமாக மாற்றி வாசிக்கும் பார்வை இந்நூலின் சிறந்த அம்சங்களில் ஒன்று. சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்களை திராவிட, தமிழ் தேசியக் கட்சிகள் சமகாலத்துக்கு இடம்பெயர்த்த பின்னணியையும் இந்த நோக்கில் விளக்குகிறது. இன்று மார்க்சியம், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், புலம்பெயர் இலக்கியம், வட்டார இலக்கியம், திருநங்கைகள் எழுத்து, மின்னூடக இலக்கியம் என்று பல்வேறு போக்குகளில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகங்கள் வளர்ச்சியடைந்து மனித விடுதலை அரசியலை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை விவாதிக் கும் இலக்கிய வரலாற்று நூல் இது.

- தி இந்து.

"இலக்கியம் என்பதைக் கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொடுக்கப்படும் ஒரு பாடம், அல்லது பொழுது போக்கிற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம், அல்லது புகழ், பரிசு, பணம் திரட்டுவதற்கான ஒரு எளிய வழிமுறை என்ற அளவில் மட்டும் பார்க்காமல், அது நமது வாழ்வையே நமக்குத் தெரியாமல் வடிவமைத்துக் கொண்டிருக்கும் நுட்பமான சக்தி நி ல ல யம் எனப் புரிந்து கொள்ள வேண்டும்; இ வ் வாறு புரிந்து கொள்ளும் போதுதான் இலக்கிய வரலாற்றையும் அதன் தேவையையும் அருமையையும் சரியாக உள்வாங்கிக் கொண்டு மேலே செல்ல முடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
முனைவர் க.பஞ்சாங்கம் :

கட்டுரைகள் :

அன்னம் - அகரம் :