புதிய அலை இயக்குநர்கள்

ஆசிரியர்: வெ ஸ்ரீராம்

Category சினிமா, இசை
Publication க்ரியா
FormatPaper Back
Pages 104
ISBN978-93-82394-08-2
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 1 x (D) 15 cms
₹110.00 $4.75    You Save ₹5
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும்
தருணங்களில், நம் உடல் ஆரோக்கியம் குன்றியிருக்கும்போது, சில சமயங்களில்
ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து, நம்முடைய உள்மனதை ஒளிர்விக்கும்.
ஒரு காட்சியோ, ஒரு வசனமோ போதும், நமக்குத் தைரியம் அளிப்பதற்கு,
வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு.
இந்தக்கரணத்திர்காகவே த்ரூஃபோவின் படைப்புகளில் ஏதாவது ஒன்று
அல்லது அதற்கு மேற்பட்ட படங்களை விரும்பியவர்கள் உலகின் பல
பாகங்களில் இருக்கிறார்கள் என்று நான் உறுதியாகச் சொல்வேன்.”
- ழான் கோலே

“மனிதனின் முகத்தைச் சித்தரிக்கும் கலைஞன் மனிதனுக்கு ஆற்ற வேண்டிய
கடமை ஒன்று இருக்கிறது. அவனுடைய இயல்பான கண்ணியத்தைக் காட்டக்
கலைஞன் தவறினாலும், குறைந்தபட்சம் அவனுடைய மேலோட்டமான
தன்மையையும், அவனுடைய அறிவீனத்தையும் மறைக்கவாவது முயல
வேண்டும். இந்த உலகத்தில் எந்த மனிதனுமே அறிவீனனாகவோ,
மேலோட்டமானவனாகவோ இருக்க மாட்டான் என்பது சாத்தியமே.
சஞ்சலமுற்று இருப்பதால் அவன் அப்படித் தோன்றக்கூடும். ஏனென்றால், அவன்
நிம்மதியாக இருப்பதற்கு ஏற்ற ஒரு சிறு மூலைகூட அவனுக்குக்
கிடைக்காமலேயே போயிருக்கும்.”
- ஜோசப் வான் ஸ்டெர்ன்பெர்க்

“ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு
எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும்,
இறுதியாக அவர் சாதித்துப் பெற்ற வடிவத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி
இருந்துகொண்டே இருக்கும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத்தான்
மீண்டும்மீண்டும் முயல வேண்டியிருக்கிறது.”
- லூயி மால்

உங்கள் கருத்துக்களை பகிர :
சினிமா, இசை :

க்ரியா :