பிளேட்டோ
₹110.00 ₹99.00 (10% OFF)

பிளேட்டோ

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 136
ISBN978-93-80219-62-2
Weight150 grams
₹110.00 ₹99.00    You Save ₹11
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அன்பைத்தேடி - அறிவை நாடி - பகுத்தறிவுடன் தன் கொள்கைகள் அத்தனையும் பின்னி மகிழ்ந்து கொண்டிருந்த கிரேக்க மூதறிஞன் சாக்ரடீசிடம் நல்லுரைகள் பெறுவதற்கு ஏதென்ஸ் நாட்டுக் கடைவீதிகளில் எல்லாம் அவரை நாடி நின்றவர்கள் நிறையப்பேர்கள். அவர்களில் ஒருவன்தான் பிளேட்டோ !
கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் தொடர்ச்சியாக இரண்டு மூன்று நூற்றாண்டுகள் வரை ஈடும் எடுப்புமில்லாக் கலைக்கூடமாக விளங்கியது கிரேக்க நாடு. பொன்றாப் புகழையும் மங்காத பொலிவையும் கொண்ட அந்த எழில் மிகு நாட்டில் தோன்றி மறையாத வீரனில்லை; அந்த நாட்டின் அருமை பெருமைகளைக்கூறி மகிழாத அறிஞர்களுமில்லை. மக்களைத் திருத்திய உத்தமர்கள் முதல் மாவீரர்கள் வரை ஆங்குத் தோன்றிய வண்ணமிருந்தார்கள்.
ஒரு பெருமைக்குரிய வீரர் பரம்பரையிலுதித்து, அறிஞர் பரம்பரையில் தவழ்ந்து “விவேக ஞானி” என்ற புகழ் கனிந்த நல்லுரைகளுக்குப் பாத்திரமான இவன் வரலாற்றைப் பார்ப்போம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :