பிறகொரு இரவு
ஆசிரியர்:
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+?id=7+2687
{7 2687 [{புத்தகம் பற்றி தேவிபாரதியின் இந்த நான்கு கதைகளையும் வாசிக்கையில் எனக்கு வசப்பட்ட கருத்து இலக்கியப் புனைவில் அவருடைய முதன்மையான கவனம் கவிந்திருப்பது மனிதச் செயல்பாடுகளின் அறச் சார்பின் மீதுதான் என்பது. அதை நியாயம் - அநியாயம், நன்மை - தீமை, ஏற்றுக்கொள்ளத் தகுந்தவை - புறக்கணிக்க வேண்டியவை, இரங்குதலுக்குரியவை - கொண்டாடப்பட வேண்டியவை என்ற எளிய எதிர்ச் சொற்களால் வகுக்கப்பட முடியாத ஒன்றாகப் புனைய அவரால் நேர்மையாக முடிந்திருக்கிறது. அவர் இந்தக் கதைகளில் ஒன்றில் இடம் பெறச்செய்திருக்கும் அருப் பாத்திரமான டால்ஸ்டாயின் அக்கறையும் அறச் சிக்கலைப் பற்றியதுதான். டால்ஸ்டாய்க்கு அவர் பார்த்த வாழ்க்கை . தேவிபாரதிக்குத் தான் பார்க்கும் வாழ்க்கை, இலக்கியத்தில் வேறு என்ன செய்ய முடியும், பாழாய்ப் போகிற மனித வாழ்க்கையை விசாரிக்காமல்?
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866