பிறகு

ஆசிரியர்: பூமணி

Category நாவல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 232
ISBN978-93-86555-29-8
Weight300 grams
₹200.00 ₹194.00    You Save ₹6
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



’ பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக்கொண்ட இந்நாவலின் amp;nbsp;கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின்பொது அடையாளம் குறித்த முப்பரிமாணச் சித்திரமொன்றை வரைந்து காட்டுகிறது. கரிசல் வாழ்வின் சகலக் கூறுகளையும் அதன் அடையாளங்களைச்amp;nbsp;சிதைக்காமல் கலைப்படுத்தியிருக்கும் பூமணி , காலத்தாலும் வரலாற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்த எளிய மனிதர்களின் வாழ்வைப் பரிவோடும்amp;nbsp;ஆற்ற முடியாத துயரத்தோடும் சொல்லிச் செல்வதோடு காலத்தின் மீதும் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். நாவலின் கதைவெளியிலும்amp;nbsp;பாத்திரங்களின் சுதந்திரத்திலும் குறுக்கிடாமல் இதைச் சாத்தியப்படுத்தும் கலைநுட்பம் பூமணிக்கு வாய்த்திருக்கிறது.

உறக்கங்கலைந்த கோவத்தில் சிவந்திருந்த கண்களை உள்ளுருட்டி மூடிய போத்திநாய்க்கர் எதையோ மு ன ங் கிய வாறு மீண்டும் மயங்கிப்போனார். வேறொண்ணுமில்லை. மேடையில் உரசிக்கொண்டுபோன ஒரு எருமை வால்மயிரால் எழுப்பிவிட்ட கோவந்தான் அவருக்கு. மேடையில் இன்னும் ஏழெட்டுப்பேர் வேப்பம்பூ உதிர்ந்த மேனியுடன் கிடந்தார்கள். ஆடெழும்பும் நேரத்துக்கே உருணிக்குள் விழுந்து மதியம்வரை சொகங்கண்டு கிளம்பிய எருமைக்கூட்டம் வெயில்மினுக்கத்தில் கோயில் முக்குவரை நகன்று பல சில்லறையாகப் பிரிந்துகொண்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பூமணி :

நாவல்கள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :