பிரிவோம் சந்திப்போம் - 2

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 240
Weight300 grams
₹170.00 ₹144.50    You Save ₹25
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மனித மனங்கள் பலவகை; அவற்றில் சலனங்களும் பலப்பல. இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு காதலில் கட்டுண்ட இள நெஞ்சங்கள் சிலவற்றையும் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள அவர்களது பெற்றோர் போன்ற பலரையும் நடமாட விட்டு உணர்ச்சிப் பின்னல்களின் உருவங்களாக அவர்களை வாசகர்களுக்குக் காட்டும் கதைதான் பிரிவோம்... சந்திப்போம் என்ற இந்நூல்.
ரகுபதியும், மதுமிதாவும்- ரத்னாவும்- ஏன் சில சமயங்களில் மட்டுமே தலைகாட்டும் அந்த மேரியும் கூட- அடையும் உள்ளக் குமுறல்கள்தான் எத்தனை... எத்தனை! அவற்றைத் தவிர்க்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் எத்தனை... எத்தனை!
மெல்லிய உணர்வுகள் கொண்ட இவர்களுடன் பெண்மையை வேட்டையாடி ஏமாற்றித் துடிக்க வைத்து எக்காளமிடும் ராட்சச இதயம் படைத்த ராதாகிஷன் போன்றவர்களையும் இந்நூலில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார் கதாசிரியர் திரு.சுஜாதா அவர்கள்.
மேலும் இக்கதையில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது அமெரிக்க மக்களின் வாழ்க்கை. அமெரிக்க மண்ணின் நாகரிக வேகத்தில் சிக்கிச் சீரழிந்து பண்பாடுகளையெல்லாம் பறந்தோட விட்டுவிட்டு, அல்லல்படுவோரின் அவலங்களை அழகாகச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.
மேலோட்டமாய்ப் பார்க்கும் பொழுது தமிழ்ப் பண்பாட்டைத் தரக்குறைவாய்த் தாக்கியிருப்பது போல் தோன்றினாலும், நுணுக்க மாக நோக்கும் பொழுது வேகமாக அமெரிக்க நாகரிகத்தில் மூழ்கித் தவிப்பவர்களின் வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டி அதன் மூல மாக தமிழ்ப் பண்பாட்டைத் தலைநிமிரச் செய்து காட்டி விந்தை புரிந்திருக்கிறார்.
இந்நூலை வெளியிட இசைவளித்த அன்பிற்குரிய திரு.சுஜாதா அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிப்பதுடன், தமிழ் வாசகப் பெருமக்களுக்கு இந்நூலைப் படைப்பதில் மகிழ்வும் அடைகின்றோம்.
- ம. திருப்பதி

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :