பிரபந்தத் தனிப்பாடல்கள்

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category இலக்கியம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 248
Weight200 grams
₹70.00       Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தனிப்பாடல் என்னும் ஆழ்கடலில் முத்தெடுக்க மூழ்கியபோது அதன் தமிழ்ச்சுவையில் நான் மூச்சுத் திணறித் தவித்தேன். அத்தனை சுவைகளும் அகத்தே நிறைந்து ஆறாச்சுவையாய் இனித்துக் கொண்டிருந்தன.
இந்த இனிப்புகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்த முயற்சியே இந்தப் பிரபந்தப் பாக்கள். தனிப்பாடல் தொகுதி ஒவ்வொன்றும் ஒரு பிரபந்தமாக உருவாகியிருக்க வேண்டியிருக்க சூழ்நிலைகளால் முற்றுப்பெறாமலேயே போய்விட்ட இந்த அரைகுறை காவியங்களை ஆய்ந்தெடுத்து உங்கள் முன் அறிமுகப்படுத்துகின்றேன். கால வெள்ளத்தில் ஓடியவை போக எஞ்சிய ஒருசிலவே தனிப்பாடல் திரட்டில் காணப்படுகின்றன. அந்த ஒரு சிலதின் அறிமுகப்படலமே இந்தப் பிரபந்தத் தனிப்பாடல்கள். விளக்க உரைகளற்று வீணே தூங்க வைத்த பாடல்களுக்கு ஒரு சின்ன முன்னுரையேனும் அளித்து உங்கள் முன் புது வடிவம் தர முயற்சித்துள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

இலக்கியம் :

சங்கர் பதிப்பகம் :