பாஸ்வேர்டு

ஆசிரியர்: கோபிநாத்

Category சமூகம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 190
ISBN978-81-8476-556-4
Weight250 grams
₹165.00 ₹148.50    You Save ₹16
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866குழந்தைகள் அற்புதமான கற்பனை சக்தி கொண்டவர்கள். அதிலிருந்து பல்வேறு கதைகளும், ஆச்சர்யங்களும், நம்ப முடியாத உவமைகளும், சிலிர்க்க வைக்கிற கவித்துவமும் அருவிபோலக் கொட்டுகிறது. ஆனால், நம்முடைய பரீட்சை அமைப்புகள் ராமாயணத்தை எழுதியது யார் என்ற கேள்விக்குப் பதில் சொன்னால், மார்க் போடுகிற அநியாயத்தைச் செய்கின்றன. புகைப்படங்கள் வெறும் காட்சிப் படிமங்கள் அல்ல.ஒவ்வொரு புகைப்படமும் வாழ்க்கையை, பகிர முடியாத உணர்வை, வலியை, அருகாமையை, அன்பை, காதலை, இயலாமையை, குற்ற உணர்வை, காமத்தை, கோபத்தை, தவிப்பை அல்லது வேறு ஏதோ ஒன்றை மனதுக்குள் கொட்டிவிட்டுப் போகிறது. எல்லோரும் இங்கே ஓடித்தான் ஆக வேண்டும். ஆனால், இப்படி, ஓடி ஓடிச் செய்கிற எதையும் நாம் உருப்படியாகச் செய்வது இல்லை என்பதுதான் ஆய்வுகளின் தகவல். காமாசோமா என்று குளிப்பதில் தொடங்கி கடமைக்கென்று செக்ஸ் வைத்துக்கொள்வது வரை எதையுமே இந்தியர்கள் முழுதாகச் செய்வது இல்லை என்று படித்தபோது 'பக்'கென்று இருந்தது. டூ வீலரை ஓட்டிக்கொண்டே செல்போனில் மெசேஜ் டைப் செய்யும் ஆட்களை இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்க முடிகிறது. வாழ்தலின் நோக்கம் வாழ்தல்தான். மற்றது எல்லாம் அப்புறம்! ஆளில்லாத கடையில் யாருக்குத்தான் டீ ஆற்றப்போகிறோம்? அவரவர் கோப்பையை ருசிப்போம் முதலில்!

உங்கள் கருத்துக்களை பகிர :
கோபிநாத் :

சமூகம் :

விகடன் பிரசுரம் :