பாலை - ஐங்குறுநூறு

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Pages 152
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவங் கொள்ளும்” என்று (சிலம்பு, 11 : 64-7) என்று, இந்தப் பாலைக்கு இலக்கணம் கூறியவர் ஆசிரியர் இளங்கோவடிகளார். அவரும் இதனைத் தனிநிலமாகக் கொள்ளாது, குறிஞ்சியும் முல்லையும் தத்தம் தகைமையினைக் கோடையின் வெம்மையால் இழந்து போயினபோது, அவ்வாறு கொடுமை வாய்ப்பட்ட குறிஞ்சியும் முல்லையுமாகிய நிலப்பகுதிகளே பாலையாகும் என்றுதான் விதி செய்தனர். இனி, நெய்தற் பாங்கிலும் இத்தகு கொடிய பாலைநிலப் பகுதிகள் காணப்படுதலைப் பின்னர் வந்துள்ள சான்றோர்கள் எடுத்துக் காட்டியிருப்பதனால் அறிகின்றோம். இவ்வாற்றால், பாலையைத் 'தனித்திணை' என்னாமல் 'பொதுத்திணை' என்று கூறுவதும் சான்றோர் மரபாயிற்று. மருதம் ஒன்றை நீக்கிப் பிற மூன்று வகை நிலத்தும் பாலை காணப்படும் எனலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :