பாலையில் ஒரு சுனை

ஆசிரியர்: இன்குலாப்

Category கவிதைகள்
Publication அன்னம் - அகரம்
FormatPaper Back
Pages 200
First EditionJul 1992
2nd EditionDec 2016
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகிரேக்க மக்களின் எழுச்சிக்குப் பாடிய பைரன் கவிதையைத் தமிழில் படைத்துத் தாத்தா அந்த நாளில் இருந்து இன்று வரை ஒடுக்கு முறைக்கான கருத்து அரசு உட்பட எங்கிருந்து வந்தாலும் அதை நான் எதிர்க்கிறேன் என்று சுபமங்களா நேர்காணலில் குறிப்பிடும் இந்த நிமிடம் வரை - இன்குலாப் படைப்புகள் எதிர்ப்பு இலக்கியமாகவே (Protest Literature) அமைந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் புதிய ஒளி பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.
சமூக மாற்றத்துக்காகப் பேனாப் பிடித்தவரின் எழுத்துக்கள் எதிர்ப்பு இலக்கியமாய்த்தானே இருக்க முடியும்?
இலக்கியத்தின் வேலை என்ன? என்று கார்க்கியைக் கேட்டபோது,வேறென்ன போராட்டம்தான்.அதுதான் இலக்கியத்தின் முதல் வேலை என்று சுட்டிக் காட்டினார்
இன்குலாப் கார்க்கியின் சீடர்...
புதிய திசை வழியைத் தேடி வரும் இன்றைய படைப்பாளிகள் பலருக்கும் இன்குலாப் ஆசான்... எனக்குதான்...


மீரா

முழுவதும் முழுவதும் அரசியலாய்ச் சில; முழுவதும் முழுவதும் மனிதாபிமானச் சித்தரிப்புக்களாய்ச் சில; இரண்டும் கலந்து சிலஇப்படிப் பன்னிரண்டு சிறுகதைகளும், ஒரு குறுநாவலுமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. அனைத்துக் கதைகளும் நடை, உடை பாவனைகளில் மக்கள் இலக்கியமாகவே அமைந்துள்ள தன்மை கவனிப்பதற்கு உரியது. கண்களைத் திறந்து, கருத்தோடு இசைந்து இந்த மண்ணைப் பார்க்க விரும்பும் எந்த ஒரு வாசகனுக்கும் இந்தக்கதைகள், பாத்திரங்கள், வருணனைப் பின்னணிகள் ஆகிய அனைத்தும் அந்நியமானவை அல்ல. 'மக்களைக் கொண்டு மக்களுக்கான இலக்கியம்' என்ற கொள்கை இந்தக் கதைகளின் மூலம் சாத்தியமாகியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இன்குலாப் :

கவிதைகள் :

அன்னம் - அகரம் :