பாலியல் கலைக் களஞ்சியம்

ஆசிரியர்: டாக்டர் .பி.எம்.மாத்யூ வெல்லூர்

Category கல்வி
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatHard Bound
Pages 316
ISBN978-81-89359-58-4
Weight0.97 kgs
₹750.00 ₹727.50    You Save ₹22
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இது ஒரு பாலியல் கல்வி நூல். கேரளத்தின் உளவியல் அறிஞர்களில் முதன்மையானவரான டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் எழுதிப் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல் 'பாலியல் கலைக் களஞ்சியம்'. பாலியலை ஒரு கலையாகப் பாவித்துப் பாலியல் அணுகு முறைகள், பிரச்சினைகள், தவறான எண்ணங்கள் குறித்து இந்நூல் விளக்குகிறது. பிற உயிரினங்களுடன் ஒப்பீடு, இதுவரையிலான ஆய்வுகள், பாலியல் கலை நூல்கள் மற்றும் ஆய்வறிஞர்கள் பற்றிய தகவல்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. கீழைநாட்டு, மேலைநாட்டுப் பாலியல் கலை நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துகள், பாலியல் சார்ந்த அரிய தகவல்கள் மற்றும் புராண, இலக்கிய, சமய நூல்களில் உள்ள கருத்துகள் பொருத்தமான இடங்களில் பயன் படுத்தப்பட்டிருப்பது இந்தக் கலைக் களஞ்சியத்தின் தனிச் சிறப்பு, ஏறக்குறைய 300 கோட்டுச் சித்திரங்கள், ஆணின் பாலியல் குறைபாடுகள், ஓரினச் சேர்க்கை , காலணி தரும் காமம், சுய இன்பம், துரித ஸ்கலிதம், பாலியல் கலை, பிணத்துடன் உறவு, பெண்ணின் பாலியல் சிரமங்கள் போன்ற 400க்கும் மேற்பட்ட தலைப்புகள் அடங்கிய இந்தக் கலைக் களஞ்சியம் பாலியல் குறித்த மிகையான கற்பனைகளைத் தகர்த்து அறிவியல் பூர்வமான தகவல்களைத் தருகிறது. தமிழில் இது ஒரு புது முயற்சி.


உங்கள் கருத்துக்களை பகிர :
கல்வி :

காலச்சுவடு பதிப்பகம் :