பாலற்ற பெண்பால்

ஆசிரியர்: ராஜ் கௌதமன்

Category இலக்கியம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 372
ISBN978-93-8897-390-8
Weight450 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்திய - தமிழகச் சூழலில் பிறப்பின் காரணமாக இன்னமும் மாந்தராய் மதிக்கப்படாத பெண்களுக்கும், தலித் சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் மாற்றுக் கலாச்சார / அரசியல் நடவடிக்கைகள் மிகவும் அவசரத் தேவைகளாக இருக்கின்றன.
பெண்விடுதலை அரசியல் என்று வரும்போது தலித் சாதிகளைச் சேர்ந்த பெண்களை உள்ளிட்ட எல்லா வர்க்கங்களையும் சாதி களையும் சேர்ந்த ஒட்டுமொத்தமான பெண்களின் கலாச்சார அரசியல் (பொருளாதார) போராட்டமாக இருக்கிறது. ஒட்டு மொத்தமான ஆணாதிக்க - தந்தைவழி - தந்தையாட்சி அதிகாரத்தை நொறுக்குகின்ற போராட்டமாக வடிவெடுக்கின்றது.
தலித் விடுதலை அரசியல் என்று வரும்போது தலித் சாதிகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஆண் - பெண்பால்களைச் சேர்ந்த மக்களின் கலாச்சார அரசியல் - பொருளாதார (வர்க்க) போராட்டமாக அமைகிறது. வைதீக பிராமணியத்தையும் அதன் பாரம்பரிய - நவீன வடிவங்களையும் அவற்றின் வல்லாண்மையையும் நொறுக்குகின்ற போராட்டமாக வடிவெடுக்கிறது. இந்திய- தமிழகச் சூழலில் இந்த இருவிதமான ஆனால் ஒரே அடிப்படை கொண்ட (பிறப்பால் ஒடுக்கப் பட்டவர்கள்) அரசியல் போராட்டங்களுக்கு பெரியாரியமும், மார்க்சியமும் இவற்றை ஒத்த ஏனைய இடதுசாரி சிந்தனைகளும் வெளியிலிருந்து கருத்தாயுதங்களை வழங்க முடியும். தலைமை விடமும் அதிகாரமும் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் மட்டுமே இருக்க முடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜ் கௌதமன் :

இலக்கியம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :