பாலற்ற பெண்பால் - பெண்பால்நபும்சகம்

ஆசிரியர்: ஜெர்மெய்ன் கிரீர்

Category வரலாறு
Publication விடியல் பதிப்பகம்
Formatpaperback
Pages 383
First EditionOct 2011
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மேற்கத்திய பெண்ணிய வரலாற்றைக் கருத்தியல் அடிப்படையில் துலக்குபவர்கள் ஆணுக்குச் சமமாகப் பெண்களுக்கு வாக்களித்தல், வேலை, ஊதியம், குடும்பம், சொத்து, கல்வி ஆகியவற்றில் உரிமைகளைக் கோரிய காலத்தை முதற் கட்டமாகவும் (புறவகை உரிமைகள்), பெண்கள் தங்களது பால், உடல், இனவிருத்தி சார்ந்த செயல்கள், மணம்புரிதல், மணவிலக்கு, கருவுறுதல், கருத்தடை, கருக்கலைப்பு ஆகிய அகவகையான செயல்கள், உரிமைகள் யாவும் தங்களுடைய ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்று போராடிய காலத்தை அடுத்த கட்டமாகவும் வகைப்படுத்துவார்கள். ஜெர்மெய்ன் கிரீர் படைத்த 'பாலற்ற பெண்பால்' (The Female Eunuch) என்ற நூல் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்ததாகும். இவர் காலத்தில் புரட்சிகரமான பெண்ணிய/ பெண்ணிய இலக்கியக் கோட்பாடுகளை ஜூலியா கிறிஸ்தவா, லூஸி இரிகரே, ஹெலன் சி, எலைன் ஷோவால்டர் போன்றவர்கள் உருவாக்கிக் கொண்டிருந் தார்கள். இவர்கள் எல்லோரும் 'சுயகண்டுபிடிப்பு', 'சுய அடையாளத்தைத் தேடுதல்', 'அகவயமான', 'தற்சார்பான' விடுதலை ஆகியவற்றிற்காகத் தந்தைவழிச் சமூகத்தின் ஆதிக்க மதிப்பீடுகளையும், அவற்றைத் தொடரச்செய்யும் நிறுவனங்களையும், கலாசார மையங்களையும் எதிர்த்தார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

விடியல் பதிப்பகம் :