பாரதி காட்டிய பாதை

ஆசிரியர்: எஸ்.கமலா கந்தசாமி

Category பொது நூல்கள்
Publication உமா பதிப்பகம்
FormatPaper Back
Pages 128
Weight150 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பாட்டுக்கொரு புலவன் என்று ஏட்டுலகம் போற்றுகின்ற எட்டயபுரத்தின் எழுச்சிக் கவிஞன். தமிழ் ஞாயிறு - பாரதி நம் வாழ்விற்கு வழிகாட்டிய நீதிக் கருத்துக்களைத் தொகுத்துச் சொல்கின்ற ஒரு கட்டுரைத் தொகுதியே இந்நூல். பாரதி காட்டிய பாதை தெளிவானது, நேர்மையானது. காலத்திற்கேற்ற புதுமையானதும் கூட. பக்தி - தேசீயம் - பெண்விடுதலை - சமுதாயம் - மனித நேயம், உலக நேயம் எனப் பல செய்திகள் பாடு பொருளாக இருக்கின்றன. யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிய மொழி இல்லை என்று தமிழைப் புகழ்ந்தான் பாரதி. 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே', என்று தமிழ் மண்ணைப் பூஜித்தான். கம்பனைப் போல் வள்ளுவன் போல்-இளங்கோ போல் பூமிதனில் புலவன் இல்லை என்று புகழ் உரைத்தான். தமிழன் எனும் நிலை தாண்டி இந்தியன் எனும் உணர்வில் பாரதநாடு பழம்பெரும் நாடு - நீரதன் புதல்வர் - இந்நினைவகற்றாதீர் என்று எச்சரிக்கைத் தருகிறவனும் பாரதியே.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.கமலா கந்தசாமி :

பொது நூல்கள் :

உமா பதிப்பகம் :