பாரதியார் கவிதைகள்

ஆசிரியர்:

Category பொது நூல்கள்
Publication வர்த்தமானன் பதிப்பகம்
FormatPaperback
Pages 2154
Weight2.20 kgs
₹650.00 ₹630.50    You Save ₹19
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உடலும், உயிரும், உள்ளமும், அறிவும் தம்முள் ஒருங்கிணைந்து செயலாற்ற இயலாத சூழலில் எழுந்த வேதனையை வெளிப்படுத்தும் பாடல் ‘நல்லதோர் வீணை' (தோ.பா.-13) ஆகும். விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல், நசையறு மனம், நவமெனச் சுடர்தரும் உயிர், தசையைத் தீ சுடுகின்றபோதும் சிவசக்தியைப் பாடும் அகம், அசைவறு மதி... இவை எல்லாவற்றையும் எனக்கு அருள்வதில் உனக்கு ஏதேனும் தடை இருக்கின்றதா? என்று சிவசக்தியிடம் பாரதி கேட்பதைப் பார்க்க முடிகிறது.
'மஹாசக்திக்கு விண்ணப்பம்' (தோ.பா.-14) செய்யும் பாடலில், பாரதி தனது மனப்போராட்டத்தை விவரிக்கும் வரிகள், நமது உள்ளத்தையும் ஏனோ கனக்கச் செய்கிறது. 'மோகத்தை அழித்துவிடு... இல்லையென்றால் எனது மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்து விடு... இல்லையென்றால் அதில் சிந்தனையை அழித்துவிடு; யோகத்தில் என்னை இருத்து... இல்லையென்றால் எனது உடலைச் சிதைத்துவிடு; பந்தத்தை நீக்கி விடு... இல்லையென்றால் அதில் உயிர்ப் பாரத்தைப் போக்கி விடு; எனது சிந்தனையைத் தெளிவு செய்... இல்லையென்றால் என்னைச் செத்த உடலாக்கு' என்று கூறும் பாடல் வரிகள் சாதாரணமானவன் சாதனையாளனாக மாறுகிறபோது நடக்கும் மனப்போராட்டத்தை விவரிக்கின்ற அற்புத வரிகளாக அமைந்துள்ளன...

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

வர்த்தமானன் பதிப்பகம் :