பாயும் புலி பண்டாரக வன்னியன்

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPAPPER BACK
Pages 466
First EditionMay 1991
Weight600 grams
Dimensions (H) 24 x (W) 15 x (D) 3 cms
₹125.00 $5.5    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“பாயும்புலி பண்டாரக வன்னியன்” என்னும் இந்தச் சுதந்திர வேட்கையை ஊட்டும் வரலாற்றுப் புதினத்தைப் படைத்து - தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளார் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்.
வரலாற்றுப் புதினம் படைப்பது எளிதல்ல எனினும் அது அவருக்குக் கைவந்தகலை. அதற்குரிய வரலாற்றுப் பின்னணியை - நாடு, காலம், அரசியல் சூழல், அண்டை நாட்டு நிலை, மக்கள் வாழ்க்கை முறை, சமயப் பழக்க வழக்கம், கதை மாந்தர் நடமாடும் இடத்தின் இயல்பு முதலான வற்றைப் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி - ஆராய்ந்து தெளிந்து, காட்சிகளாகக் கண்டு, படிப்பவர் கருத்தில் படலம் படலமாக விரியும் வண்ணம், எழில் ஓவியமாகத் தீட்டுகின்றார் கலைஞர்.
சங்க காலத் தமிழகத்தின் பெருமைக்குரிய சூழல் விளக்கும் "ரோமாபுரிப் பாண்டியன்”, ஆங்கிலேயர் ஆதிக்கம் தமிழ் மண்ணில் பரவிய காலத்தில் தமிழகத்தின் நிலையைச் சித்தரிக்கம் “தென்பாண்டிச் சிங்கம் ", வழிவழி வந்த நாட்டுப்புறக் கதைகளைக் கொண்டு தமிழ்வீரம் காட்டும் "பொன்னர்-சங்கர்” ஆகிய புதினங்களைப் படைத்த கலை உணர்வு இதனையும் வரைந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :