பாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம்

ஆசிரியர்: சு. தியடோர் பாஸ்கரன்

Category சினிமா, இசை
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 280
ISBN978-81-8493-701-5
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹190.00 $8.25    You Save ₹9
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇசை குறித்தும் இலக்கியம் குறித்தும் ஏனைய கலை வடிவங்கள் குறித்தும் ஆழமாகத் தெரிந்துகொள்ள பல நூல்கள் இருக்கின்றன. ஆனால், தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றுகலந்துதிவிட்ட திரைப்பட உலகம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் தமிழில் அரிதாகவே இருக்கின்றன. தியடோர் பாஸ்கரனின் இந்நூல், அந்தக் குறையைத் தீர்த்துவைக்கிறது. மௌனப்படம் தொடங்கி வண்ணப்படம் வரையிலான தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி இதில் பதிவாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பாதையைத் தீர்மானித்த முக்கியப் படங்களையும் படைப்பாளிகளையும் விமரிசனப்பூர்வமாக இதில் அணுகுகிறார் தியடோர் பாஸ்கரன். அடிப்படை புள்ளிவிவரங்களைத் தாண்டி, தேசியம், திராவிடம் போன்ற சித்தாந்தங்கள் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கத்தை இந்நூல் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறது. பொழுதுபோக்கு, பிரசாரம் ஆகிய எல்லைகளைக் கடந்து நம் வரலாற்றோடு கலந்துவிட்ட ஒரு தவிர்க்க இயலாத சக்தியாகத் தமிழ் திரையுலகம் மாறியுள்ளதை இந்தப் புத்தகம் சான்றாதாரங்களோடு நிரூபிக்கிறது. தமிழ் சினிமாவின் வரலாறு குறித்து, அதன் போக்குகள் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்ற தியடோர் பாஸ்கரனின் முக்கியமான பதிவு இந்தப் புத்தகம். ------------------ திரைப்படம் குறித்து எழுதப்பட்ட சிறந்த நூலுக்கான இந்திய அரசின் விருது பெற்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். 1897ஆம் ஆண்டு சென்னையில் (அப்போது மதராஸ்) அரைவல் ஆஃப் தி டிரெயின், லீவிங் தி ஃபேக்டரி ஆகிய இரு குறும்படங்கள் திரையிடப்பட்டதில் தொடங்கி சாமிக்கண்ணு வின்சென்ட், ஆர்.வெங்கையா, ஆர்.நடராஜ முதலியார், பிரகாசா, ஏ. நாராயணன் போன்றோருடைய சினிமா ஈடுபாடுகளும் தமிழ் சினிமாவின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் வசனங்களின் முக்கியத்துவம், பாடல்களின் பங்களிப்பு போன்றவை தனித்தனி அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன. சில வசனகர்த்தாக்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர்கள் பற்றியும் அரிய தகவல்கள் உள்ளன. சில முக்கியமான படங்களின் கதைச் சுருக்கமும் அப்படங்களில் பணிபுரிந்த கலைஞர்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 1987இல் சென்னை விக்டோரியா அரங்கில் எம்.எட்வர்ட்ஸ் சில குறும்படங்களைக் காட்டியது முதல் 2011இல் ஆடுகளம் படத்துக்காக வெற்றி மாறன் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்றதுவரை தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. படங்களின் தலைப்புகளும் சொல்லடைவும் இணைக்கப்பட்டிருப்பது படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நன்றி: தினமணி, 24/6/13.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு. தியடோர் பாஸ்கரன் :

சினிமா, இசை :

கிழக்கு பதிப்பகம் :