பாதையில் பூக்கள்

ஆசிரியர்: சத்குரு

Category ஆன்மிகம்
Publication ஈஷா அறக்கட்டளை
FormatPaper Back
Pages 195
Weight300 grams
₹85.00 ₹76.50    You Save ₹8
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசத்குரு அவர்களின் தெளிந்த பார்வையில் வாழ்வின் அத்தனை அம்சங்களும் ஒளிபெறும் அற்புதத்தின் பதிவாய் இந்தத் தொகுப்பு. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் சத்குரு அவர்கள் எழுதிவந்த பத்திகளின் தமிழ் வடிவம் இது. போட்டிகள் நிறைந்த உலகில் பூக்களின் பங்கு என்னவென்று இதன் பக்கங்கள் புரளப் புரள நம்மால் பரிந்து கொள்ள முடியும்.
உள்ளம் மலா, உணர்வுகள் மலர், உறவுகள் மலர, உயிர் மலர, சத்குரு மிகுந்த கருணையோடு வழி காட்டுகிறார். நளினமான நகைச்சுவை, நேர்பட உரைக்கும், துல்லியம், உயிரை அசைக்கும் உவமைகள், காலுக்குக் கீழே பூமியைக் கணப்பொழுதில் உருவி விடுகிற உண்மைகள் என்று, கற்பக விருட்சத்தில் மலர்ந்த கதம்ப மலர்களின் மாலை இது. அன்றாட வாழ்வின் அடிப்படைத் தன்மைகளில், தொடங்கி ஆன்மீகத்தின் உச்ச மலர்ச்சி வரையில் ஒவ்வோர் அம்சத்தையும் சத்குரு அனாயாசமாய் அலசிக் கொண்டே செல்கிறார்.
இந்தப் புத்தகத்தை வாசிக்க வாசிக்க, நம் பாதையில் புதிது புதிதாய்ப் பூக்கள் சிரிப்பது புலப்படும். வாசித்தவற்றை யோசிக்க யோசிக்க, வாழ்க்கை நமக்கு வசப்படும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
சத்குரு :

ஆன்மிகம் :

ஈஷா அறக்கட்டளை :