பாட்டிகளின் சிநேகிதன்

ஆசிரியர்: நா.விச்வநாதன்

Category கதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 128
ISBN81-234-1304-1
Weight150 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பாட்டிகளின் சிநேகிதனாக இருந்து கதைகள் கேட்டு, கவிதை நயத்தோடு கதை சொல்கிறார் நா. விச்வநாதன். விச்வநாதன் வித்தியாசமான படைப்பாளர்தான். இயல்புத் தன்மைகளை இழையோட விட்டுச் சிறுகதைகளை நெய்திருக்கிறார். அவர் நட்டுவைத்த சிறுகதைப் பூச்செடிகள் இலக்கியச் சோலையில் மணம் வீசுகின்றன.
வாழ்க்கையை அதனதன் அழுக்குகளோடும் அதனதன் அழகுகளோடும் மேன்மைகளோடும் கயமைகளோடும் அருகிருந்து பார்ப்பது அவசியமாகிறது என்ற இலக்கணம் வகுத்துக்கொண்டு கதை படைக்கிறார்.
* பாட்டு சொல்லித்தர வந்த வாலிபனை “அவன் நம்ம குழந்தை மாதிரி - குழந்தைதான். . . நம்ம குழந்தைதாங்க அவன்" என்று இரண்டாம் தார இளம் மனைவியின் ஆழ்மனம் சொல்வதைக் கேட்டுச் சந்தேக மேகத்தில் மறைந்திருந்த முதிய கணவன் மழையாகிப் போனதுதான் 'யோகம்'.
* உயிருக்குப் போராடும் நோயாளியை மருத்துவமனையில் சேர்ப்பதைவிடக் கோவில்விழா முக்கியமானதல்ல என்பதை உணர்த்திட, பூஜை நடந்துகொண்டிருக்கும்போது கூட்டத்தைக் கலைத்து, கோவில் பந்தல் வழியாக வண்டியை வேகமாக ஓட்டி மக்களை 'இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு' கொண்டு வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.விச்வநாதன் :

கதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :