பாடுக பாட்டே

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

Category கட்டுரைகள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper back
Pages 192
ISBN978-81-84469-66-7
Weight250 grams
₹150.00 ₹127.50    You Save ₹22
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கவிஞர், கவிதாயினி எனும் சொற்கள் மிகப் பிற்காலத்தவை. புலவர் என்றே பாடல் இயற்றுபவர் அறியப்பட்டார். புலவர் என்றால் தமிழ்க் கல்லூரிகளில் பயின்று பட்டம் வாங்கியவர் என் மட்டுமே பொருள் இல்லை. பாட்டு எழுதும் ஊக்கம் உடையாரெலாம் புலவர். கபிலர், பரணர், ஒளவையார், வெள்ளிவீதி யாவரும் புலவர்கள். சிற்பி, ஓவியர், தச்சர், கொல்லர் இவர்களின் பெண்பால் என்ன?
வறுமையை, துன்பத்தை, இயற்கையை, வீரத்தை, கொடையை, அழகை, அறத்தை, நீதியை அவர்கள் பாட்டாகப் பாடி வைத்தனர். வித்தை விரும்பு, தோற்பன தொடரேல், கற்பெனப்படுவது சொல் திறம்பாமை, கலக்கினும் தண்கடல் சேறாகாது என்பன பாடல் வரிகள்.
பாடுக பாட்டே எனுமிந்தத் தொடரின் பொருள். சிறப்புகளைப் பாட்டாகப் பாடுவாயாக என்பது. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் சாத்தியமான சில பாடல்களின் சிறப்புக்களை, ஈண்டு நாம் பாடப் போகிறோம். எனவே இந்த நூலின் தலைப்பு ‘பாடுக பாட்டோ’! என்றாயிற்று.


உங்கள் கருத்துக்களை பகிர :
நாஞ்சில் நாடன் :

கட்டுரைகள் :

விஜயா பதிப்பகம் :