பழந்தமிழ்
ஆசிரியர்:
சி.இலக்குவனார்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+?id=1978-6097-3013-7541
{1978-6097-3013-7541 [{புத்தகம் பற்றி பேரறிஞர் கால்டுவல் இங்கு வாழ்ந்த காலத்தில் தொல் காப்பியமும் சங்க இலக்கியங்களும் வெளிவந்து அவர்கைக்குக் கிட்டில போலும். அதனால் அவர் கூறும் கருத்துக்களில் சில இன்று மாற்றம் அடைதற்குரியனவாய் உள்ளன. அவற்றையும் ஆங்காங்குச் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆயினும் அவர் நூலின் துணைகொண்டே நம் தமிழ் தென்னக மொழிகளின் தாய் என்றும், இந்திய மொழிகளின் தாய் என்றும் நிலைநாட்ட முயன்றுள்ளோம்.
<br/> பேரறிஞர் கால்டுவல் போன்று நம்மால் போற்றத்தகுந்தவர் பேரறிஞர் ஈராசு ஆவார். அவர் தம்மைத் திராவிடர் என்றே அழைத்துக் கொண்டார். அவர் மறைந்த மாநகரங்களான 'ஆரப்பா' 'மொகஞ்சதரோ' எனும் இரண்டைப் பற்றி நன்கு ஆராய்ந்து அங்கு வழங்கிய மொழி தமிழே என்று நிலை நாட்டியுள்ளார், அவர் கூறியுள்ள ஆராய்ச்சியுரைகள், “பழந்தமிழே இந்திய மொழிகளின் தாய்” என்பதை நிலைநாட்டத் துணை புரிந்துள்ளன.
<br/> “தமிழ் இந்நாட்டு மொழியே ஆரியம் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் வழங்கிய மொழி பழந்தமிழே” என்று நிலைநாட்டுவதற்கு 'நன்னெறி முருகன், என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சுனிதக் குமாரர் சாட்டர்சி இயற்றியுள்ள “வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்" எனும் நூல் பெரிதும் துணைபுரிந்துள்ளது. தமிழ் மொழியின் ஏற்றத்தை நிலைநாட்ட ஆங்காங்கு மேலைநாட்டு மொழிநூலறிஞர்களின் உரைகளை எடுத்தாண்டுள்ளோம். அனைவர்க்கும் நம் உளமார்ந்த நன்றி என்றும் உரியதாகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866