பழந்தமிழக வரலாறு

ஆசிரியர்: கணியன் பாலன்

Category ஆய்வு நூல்கள்
Publication தமிழினி
FormatHard Bound
Pages 352
First EditionJul 2018
ISBN978-81-87641-79-7
Weight550 grams
Dimensions (H) 24 x (W) 15 x (D) 3 cms
₹320.00 $13.75    You Save ₹16
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பழந்தமிழக வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்ற ஓர் அழுத்தமான கருத்தை ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதிய வைக்கத்தான் இந்நூல் முயல்கிறது. வளர்ச்சி பெற்ற ஓர் உயர்நிலைச் சமூகமாக, பண்டைய மேற்கத்திய சமூகங்களுக்கு இணையான ஒரு சமூகமாக பழந்தமிழ்ச் சமூகம் இருந்துள்ளது. என்பதை இந்நூல் உறுதிப்படுத்துகிறது. சங்ககாலம். அதன் ஆட்சியாளர்கள், புலவர்கள் ஆகியவர்களின் காலம் குறித்த ஒரு தெளிவை வழங்குவதே இந்நூலின் முக்கிய நோக்கம். பல்வேறு தரவுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி சங்க இலக்கிய காலகட்டத்தை கி.மு. 750-50 என இந்நூல் உறுதி செய்கிறது.! புதிய ஆய்வு முறையியல் கொண்டு கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான பத்துக் காலகட்ட சங்ககாலப் புலவர்கள். ஆட்சியாளர்களின் ஆண்டுகளை, உலக மற்றும் இந்திய வரலாற்றோடு இணைத்து, முறைப்படி வரிசைப்படுத்திக் கணித்து இந்நூல் வரையறை செய்துள்ளது. இவ்வரையறையும். கணிப்பும் சேரன் செங்குட்டுவன் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு உரியவன் என்பதை உறுதிப்படுத்துகின்றன. தமிழரசுகளிடையே இருந்த ஐக்கிய கூட்டணி. அவர்களின் வட இந்திய, வடதிசைப் படையெடுப்புகள். அவர்களின் கடற்படை வலிமை. உலகளாவிய வணிக மேலாண்மை, பொருளுற்பத்தி, தொழில் நுட்பத்திறன். தத்துவ அறிவியல் மேன்மை முதலியன குறித்த ஓர் ஆழமான விளக்கத்தை பழந்தமிழகம் குறித்த காலவரிசையுடன் கூடிய முழுமையான ஒரு வரலாற்றை இந்நூல் வழங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கணியன் பாலன் :

ஆய்வு நூல்கள் :

தமிழினி :