பல்லுயிரியம்

ஆசிரியர்: ச.முகமது அலி

Category கட்டுரைகள்
Publication வாசல் படைப்பகம்
FormatPaper Back
Pages 168
Weight200 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




மலை, சிறுபுதர், காடு, புல்வெளி, பறவை, மீனினம் கடல். விலங்கு, ஓடை, பூச்சி - இவற்றில் எதுவொன்றை தொந்தரவு செய்தாலும் இன்னொன்று சரிந்துவிடும்படி பிணைக்கப்பட்டுள்ள பல்லுயிரிய வலைப் பின்னலை நாம் புரிந்துகொள்ள வேண்டிய காலம் இது. தவறினால், ஒரு கணப்பொழுதுகூட சகித்துக் கொள்ள முடியாத வாழ்க்கையை
அது நமக்குப் பரிசாகத் தரும். நம் கண்ணெதிரே மரமோ, நிலமோ. நீர்நிலையோ, பிராணியோ சிரழியும் தருணத்தில்
எந்தச் சலனமும் இல்லாது மௌனத்தில் அமிழ்ந்தேயிருக்கும் நமது சமூகத்தின் கதி என்னவாகும் ? காட்டுயிர்களுக்கும், இயற்கையின் இயல்பான நிகழ்வுகளுக்கும் 'உலகை அழிக்கும் தீய சக்திகள் என்று நாம் சூட்டியுள்ள பட்டங்கள் எவ்வளவு மலினமான பொய் என்பதை உணர்ந்திருக்கிறோமா?
திரும்பிய திசையெல்லாம் நிலவளத்தைக் கொல்லும் பாலிதீன் பைகள் காற்றில் படபடக்கும் இக்காலத்தில், Operation Green hunt என்று மக்களைத் துரத்திவிட்டு நிலங்களையும், வளங்களையும் விற்றுக் கொண்டிருக்கும் இக்காலத்தில்
இப்புத்தகம் இயற்கையை,வளங்கள்ை விலங்குகளை அறிவியலாக புரிந்துகொள்ள ஒரு அகல் விளக்கு.
விலங்குகளை டிஸ்கவரி சேனலில் ரசிக்கும் அதேவேளையில் நம்மைச் சுற்றியுள்ள காட்டுயிர்களையும் கண்ணெதிரில் விரியும் இயற்கைப் பரப்பையும் நேசிக்க அழைக்கும் புத்தகம் இது: பல்லுயிரியம் - இயற்கையியலாளர் முகமது அலி
அவர்களின் உணர்வுப்பூர்வமான அக்கறையிலிருந்து உருவாகியிருக்கும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ச.முகமது அலி :

கட்டுரைகள் :

வாசல் படைப்பகம் :