பல்லவ திலகம்
₹180.00 ₹171.00 (5% OFF)

பல்லவ திலகம்

ஆசிரியர்: சாண்டில்யன்

Category சரித்திரநாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatPaperback
Pages 296
Weight200 grams
₹170.00 ₹136.00    You Save ₹34
(20% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இரண்டாவது நந்திவர்மன் புதல்வனான தந்திவர்மனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்ததாகவும், அவனுக்குப் பின் வந்த பல்லவர்கள் அதையொட்டி 'பல்லவதிலக குலோத்தவ' என்ற பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டதாகவும் திரு. சுப்பிரமணிய ஐயர் "Historical Sketches of Ancient India" என்ற நூலில் கூறுகிறார். பேராசிரியர் கோபாலன் இரண்டாவது நந்திவர்மனின் ராஷ்டிரகூட மனைவியான ரேவா தேவிக்குப் பிறந்தவன் தந்திவர்மனென்றும், அவன் பாரத்வாஜ கோத்தி ரத்தைச் சேர்ந்தவனென்றும் "History of the Pallavas" (பல்லவர் வரலாறு) என்ற நூலில் சொல்லுகிறார். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி கோவிலிலுள்ள கல்வெட்டொன்று தந்திவர்மன் வைணவனென்பதற்கும் பாரத்வாஜ கோத்திரத் தவனென்பதற்கும் சான்று கூறுகிறது. ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் கோவிந்தன் காஞ்சி மீது படையெடுத்துத் தந்தி வர்மனைத் தோற்கடித்த விவரங்கள் பண்டிட் விசுவேசுவர நாத்ரென் எழுதிய "History of the Rashtrakudas" என்ற நூலில் இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :