பலவிதமான வீடுகள்

ஆசிரியர்: டி.எம்.ரகுராம்

Category கதைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaper back
Pages 176
First EditionDec 2013
ISBN978-93-80545-75-2
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$6       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கேரள மலையாளிகளின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடிதான். ஆனாலும் நமது இந்திய உபகண்டத்தில் உன்னதமான, உயிரோட்டமான இலக்கியமாக அவர்களது மலையாள இலக்கியம் இன்று திகழ்கிறது. இந்த இலக்கிய மறுமலர்ச்சியினால் கேரளாவில் வாசிப்புநிலை, உயர்தரப் பதிப்பக வெளியீடுகள், சுறுசுறுப்பாக இயங்கும் நூலகங்களின் கட்டமைப்பு, உற்சாக உணர்வுள்ள வாசகர்கள், சமூக உணர்வுப் பார்வைகள், அதன் விளைவாகஎழும் புரட்சிகள், காலத்திற்கேற்பப் பிறமொழி இலக்கியங்களுடனான சரியான உறவுமுறை முதலான போக்குகளில் மேலான பங்கேற்பு நிகழ்கிறது. நெடுங்காலமாகவே சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டின் பழைமையைத் தன்னுள் ஏற்றுச் செரித்துக்கொள்ள மலையாள மொழி பழகியிருக்கிறது. ஜெயகாந்தன், நீல. பத்மநாபன், சுந்தரராமசாமி, ஜெயமோகன் என்பதாகப் பல தமிழ் எழுத்தாளர்கள் மலையாள எழுத்துகளில் இன்று நடமாடுகிறார்கள். புராணங்களும் இதிகாசங்களும் மலையாளத்தையும் தமிழையும் ஒரே நேர்கோட்டில் இணைய வைத்தன என்ற நிலையில் தற்கால இலக்கியத் தடங்களின் இணைப்பு கவிமணியார், கா. அப்பாதுரையார், சி.ஏ.பாலன் ஆகியோர் காலத்திலிருந்து தொடங்கியதாகக் கொள்ளலாம். இவர்கள் இருமொழிகள் சார்ந்த எல்லைப்பகுதிகளில் வாழும் வாய்ப்பு பெற்றிருந்தார்கள் என்பது முக்கியமான செய்தி.

உங்கள் கருத்துக்களை பகிர :