பறையன் பாட்டு

ஆசிரியர்: கோ.ரகுபதி

Category ஆய்வு நூல்கள்
Publication தடாகம் வெளியீடு
FormatPaperBack
Pages 112
First EditionNov 2017
ISBN978-81-934765-1-2
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 2 x (D) 1 cms
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


பறையன் பாடல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள்இந்நூலாசிரியர்களின் கற்பனையில் உதித்தவைஅல்ல.மாறாகத் தீண்டாமையைஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும்வைதீக சமயத்தின் புனிதநூல்களில் இடம்பெற்ற செய்திகள்தாம். எனவேஇச்செய்திகள் உண்மை அல்ல என்று வைதீகர்களால்மறுக்கமுடியாது.
காலனிய ஆட்சிக் காலத்தில் தலித் கலை இலக்கியப் படைப்புகள் எவையேனும் வெளியிடப்பட்டனவா? என்ற கேள்விகள் எழுந்தன. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் பறையன் பாட்டு என்ற தலைப்பில் இரண்டு கலைப் படைப்புகள் இருப்பதை அறிந்து நூலக அலமாரியில் தேடினேன், இருக்கவேண்டிய இடத்தில் இல்லாததால் அவை கையில் அகப்படவில்லை, காணாமல் போய்விட்டனவோ? என்ற அச்சமும் குறுக்கிட்டது. ஒருநாள் மாலைப்பொழுதில் அற்புத.நாதன். பறையன் பாட்டும் மற்றொருநாள் “பறையன் பாட்டும் கைக்குக் கிட்டின. இவைபோன்ற கலைப்படைப்புகள் வேறு எவையேனும் வெளியிடப்பட்டனவா? எனத் தேடியபோது நந்தன் பாட்டு, ஹரிஜன சேவாக்தம். தீண்டாமை ஒழிப்புச் சிந்து எனப் பல பாடல்கள் கிட்டின. பல வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்த வண்ணான் பாட்டும் அகப்பட்டது. தலித்தலலாதோரால் படைக்கப்பட்ட அந்தப் பாடல்களைப் படித்த பின்னர் அவற்றைத் தொகுத்து வெளியிடுவது அவசியம் என்பதை அவை உணர்த்தின. அப்போது முதலில் எழுந்த கேள்வி எந்த அரசியல் சூழல் தலித்தல்லாதோரைத் தலித் படைப்புகளைப் படைப்பதற்குத் தூண்டியது?

உங்கள் கருத்துக்களை பகிர :