பனி குல்லா

ஆசிரியர்: கவிதைக்காரன் இளங்கோ

Category சிறுகதைகள்
FormatPaper back
Pages 136
Weight200 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமெட்ரோவாசியான இளங்கோவுக்கு, தான் கடந்துசென்ற, விரும்பிய அல்லது விரும்பாத காட்சிகளைப் படிமங்களாக்கி சொல் விளையாட்டுக்களில் அசாத்தியங்களைப் புகுத்தி வாசகளைப் பரவசப்படுத்திய வடிவம் பிரத்யேகமானது. ஆனால் அதிலிருந்து விலகிச்சென்று சிக்கலற்ற , வடிவத்தில், சொற்களை இறைக்காத, காட்சிகளை திரை போல் முழுமையாக நிரப்பாமல், சம்பவங்களைச் சொல்லியும் உரையாடல் வழியாகவும் உளவியல் அடிப்படையைக் களமாகக் கொண்டிருக்கும் இந்த கவிதைக்காரனின் கதைகள், இறங்கும் தருவாயில் ரோலர் கோஸ்டரில் பயணிக்க அழைக்கிறது.

அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு கதைகள் கேட்டு வளர்ந்த பிள்ளை நான். அம்மா ஒரு சிறந்த கதைச் சொல்லி. ஓர் அறையும், சமைப்பதற்கு கொஞ்சம் இடமும் உள்ள ஒண்டுக்குடித்தனத்தில் விளையாண்டுத் திரிந்த என்னுடைய குழந்தைப் பருவ சம்பவங்கள் பலதும் இன்றும் மங்காமல் என் நினைவுகளில் இருக்கிறது. தினம் இரவுகளில் மடியில் கிடத்திக்கொண்டு அம்மா கதைகள் சொல்லச் சொல்ல 'ம்' கொட்டிக்கொண்டிருப்பேன். அப்பா கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு வர லேட்டாகும். அப்போது சுமதி பிறந்திருக்கவில்லை. மின்சாரம் போய்விட்ட இரவுகள்எனக்குப் பயமாக இருக்கும். சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் சுவரில் அசையும் நிழல்கள் பூதாகரமாய் இருப்பதைப் பார்த்து பயந்தபடியே அம்மாவின் மடியில் கிடப்பேன். கதைகளின் வழியே என்னுடைய பயத்தைப் போக்க அம்மா முயன்றிருக்கலாம். அதிலிருந்து இரவென்றாலே எனக்கு கதைகள் தான். ஒவ்வோர் இரவும் வெவ்வேறு கதைகள் வேண்டுமாயிருந்தது எனக்கு. கதைகள் ரிப்பீட் ஆகும்போது 'வேற கதைத்தான் வேணும்' என்று அடம் பிடிப்பவனாக இருந்திருக்கிறேன். பிடிவாத குணம் அங்கிருந்து தொடங்கியிருக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைக்காரன் இளங்கோ :

சிறுகதைகள் :

யாவரும் பப்ளிஷர்ஸ் :