பனித்துளி விழுங்கிய ஆகாயம்

ஆசிரியர்: குகை மா.புகழேந்தி

Category கவிதைகள்
Publication பரிதி பதிப்பகம்
FormatPaper Pack
Pages 747
ISBN978-81-945795-6-4
Weight900 grams
₹800.00 ₹776.00    You Save ₹24
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒரு கனவு போல நிகழ்ந்து விடுகிறது எல்லாம். பிறக்கவேண்டும் வாழவேண்டும் என்பதும் முன்பு கண்ட ஒரு கனவுதான்; நிகழ்ந்தேவிட்டது.
காதலிக்கவேண்டும் கவிதை எழுதவேண்டும் என்பதும் அதற்கும் முன்பு கண்ட ஒரு கனவேதான்.
ஒன்றன்பின் ஒன்றாய் கனவுகள் நிறைவேறும் நிஜத்தில் இதோ, இத்தனை வருடங்களாய் எழுதி ரசித்தவையெல்லாம் ஒரு மாபெரும் புத்தகமாக கைகளில் உட்கார்ந்து... நான்தான், உன்னுடைய மனசேதான் பார்... மீண்டும் ஒருமுறை உன் மனதை நீயே படித்துப்பார் என்று கனக்கிறது.
கனத்த மனதுதான். லேசான மனசுதான் கனத்து கனத்து, கவிதைகளாய் அதை இறக்கிவைத்து விடுகிறது. 90களில் துவங்கிய கவிதைப் பயணம் 2001ல் காற்றுக்குப் பதிலாய் என்கிற முதல் தொகுப்பில் ரெக்கை கட்டிக்கொண்டது. அதன் பிறகு பறத்தல் நிற்கவேயில்லை.
உள்ளே - வெளியே, அருகே - எதிரே, அங்கே - இங்கே... என்று எல்லாம் சக மனிதர்களிடமிருந்தும், உயிர்களிடமிருந்தும் அனுபவமாய்க் கண்டெடுத்த சொற்களின் குவியல்கள். ஒவ்வொரு குவியலுக்கும் ஒவ்வொரு பெயர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

பரிதி பதிப்பகம் :