பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சி

ஆசிரியர்: கதிர் முருகு

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 104
Weight100 grams
₹30.00 ₹25.50    You Save ₹4
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இலக்கியம் படித்தவர் மட்டுமே இன்புறும் சங்க இலக்கியங்களைச் சாதாரண மனிதனுக்கும் கொண்டு சேர்த்து தமிழின் தமிழனின் மாண்பினை உணர்த்த வேண்டும். கம்பராமாயணமும் மகாபாரதமும் கிராமங்களின் மூலை முடுக்கெல்லாம் சென்றதுபோல சங்க இலக்கியம் ஏன் கொண்டு செல்லப்படவில்லை? சிந்திக்க வேண்டியது இது... அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் படித்து விட்டால் அது சங்க இலக்கியத்தை முழுமையாய்ப் படித்ததாகாது.
தமிழின் ஆணிவேர் ஐந்தாயிரம் ஆண்டுக்கும் முந்தி இறங்கியது. இன்றைக்கு அது கிளைவிட்டு விரிந்து வளர்ந்து இலக்கியங்கள் புதிது புதிதாய் பூத்துக் குலுங்கிக் காலமென்னும் பேராற்றங் கரையில் இன்னும் புதுமையாய் நின்று மிளிர்கிறது. அதனைக் காப்பது நம் கடமை.
என் வாழ்வின் உயர்வில் மகிழ்ச்சி கொள்ளும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறைப் பேராசிரியர் முனைவர் மு. பொன்னுசாமி, நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர், செயலர், கல்வி அலுவலர், முதல்வர் ஆகியோருக்கு நன்றி. நூலைச் சிறந்த முறையில் வெளியிட்ட சாரதா பதிப்பகத்திற்கு என் நன்றி.
இந்நூலைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஏற்றுப் போற்றுமென நம்புகிறேன்.
கதிர்முருகு

உங்கள் கருத்துக்களை பகிர :
கதிர் முருகு :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :