பத்துப்பாட்டும் பண்டைத்தமிழரும்

ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்

Category இலக்கியம்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 152
Weight200 grams
₹150.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பண்டைத் தமிழர்களைப் பற்றி இன்று யார் யாரோ என்ன என்னவோ பேசியும் எழுதியும் வருகின்றனர். தமிழர் நாகரிகத்தைப் பற்றிக் கூட்டியும் குறைத்தும் கூறுகின்றனர் சிலர். இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுவதில் உள்ள உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பழந்தமிழ் நூல்களைப் பார்த்தாக வேண்டும். தமிழர்களின் உண்மைப் பண்பாட்டை உணர இவற்றைத் தவிர வேறு சரியான சான்றுகள் இல்லை.
நமது பழைய நாகரிகம், உயர்ந்ததாயினும் சரி, தாழ்ந்ததாயினும் சரி அதனை அப்படியே நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமது பழைய வரலாறு நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்காது. முன்னேற்றம் என்பது தடுக்க முடியாதது; காலப்போக்கை ஒட்டியது; நமது பழைய நாகரிகத்தை நாம் அறிந்து கொள்ளுவதனால் நமது முன்னேற்றம் இன்னும் விரைந்து வளரும். ஆதலால் இந்நூலிலே பத்துப்பாட்டுக் காலத்துச் செய்திகள் பல அப்படியே எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழர்களின் பண்பாட்டை அறிய இந்நூல் உதவுவது உறுதி. இந்த நம்பிக்கையுடனேயே இந்நூல் எழுதப்பட்டது. தமிழர்கள் இந்நூலை வரவேற்பார்கள். என்ற முழு நம்பிக்கையோடுதான் இந்நூல் வெளிவருகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாமி. சிதம்பரனார் :

இலக்கியம் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :