பதினோராவது அவதாரம் - பனி நிலவு ( 2 நாவல் சேர்த்து)

ஆசிரியர்: ராஜேஷ்குமார்

Category நாவல்கள்
Publication RK பப்ளிஷிங்
FormatPaper back
Pages 216
Weight200 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பதினோரவது அவதாரம்
எப்போதும்.. தீயவற்றை அழிக்க கடவுள்தான் அவதாரம் எடுத்து வரவேண்டும் என்பதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சில மனிதர்களும், அவதாரம் எடுப்பார்கள். அவர்களின் அந்த அவதாரம் எப்போது தோன்றும்... மறையும் என யாருக்கும் தெரியாது. ஆனால் அச்சமயம் கொடுஞ்செயல்கள் தன் அளவில் சிறுத்திருக்கும். ஆனால் முற்றிலும் அவற்றை அழிக்கமுடியுமா? அப்படி அழிக்க வந்த இந்த பதினோரவது அவதாரம் எப்போதும் நம்மை காக்குமா.. இல்லை தன் வேலை முடிந்தவுடன் அழிந்துவிடுமா? தொடர் கொலைகள்... சவால் விடும் கொலையாளி... திறமையான புலனாய்வு... ஒரு இரண்டு ட்ராக்குகள் கொண்ட பரபரப்பான க்ரைம் த்ரில்லர்.
பனி நிலவு
லேகா, ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். தன் அம்மா செண்பகவல்லி, அப்பா ராமமூர்த்தியுடன் வசிக்கிறாள். திடீரென்று சுற்றியுள்ளவர்கள் அனைவரும் ஆச்சரியம்படும்படியாக லேகாவிற்கு பணக்கார இடத்தில் திருமணம் சம்பந்தம் அமைகிறது. அதுவும் மும்பையிலிருந்து,
இந்த மகிழ்ச்சியான தருணத்துடன் கூடவே ஒரு புயல் போல சிக்கல் ஊர்மிளா என்ற பெண் உருவில் வருகிறது. அந்த சிக்கலைத் தீர்க்க வேண்டிய கட்டாயம் லேகாவிற்கு. மும்பைக்கு புறப்பட்டு செல்கிறாள். தன் வருங்கால கணவன் சுந்தருடன். சென்ற இடத்தில் அலைக்கழிக்கப்படுகிறாள்.
உண்மையைக் கண்டுபிடிக்க அவள் படும்பாடு.... நம்மை பதைபதைக்க செய்யும். ஆனால் நிறைய இடங்களில் நெகிழவும் செய்யும்... இந்த பனிநிலவு.


உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜேஷ்குமார் :

நாவல்கள் :

RK பப்ளிஷிங் :