பதினெண் கீழ்க்கணக்கு (தொகுதி 1)

ஆசிரியர்: வ.த.இராமசுப்பிரமணியம்

Category கட்டுரைகள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 160
Weight150 grams
₹100.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் நாலடியார் என்பது முதலாவதாக விளங்க, அதனை அடுத்து இரண்டாவது நூலாக வரிசையில் உள்ளது நான்மணிக்கடிகையாகும். கடிகை என்பது நாழிகை வெண்பாவைக் குறிக்கும். இதன் ஆசிரியர் விளம்பி நாகனார் ஆவர். இந்நூலாசிரியரின் காலம் இளங்கோவடிகள் காலத்தையொட்டியது என்று அறிஞர்கள் உரைப்பர். சிறந்த நடையும் கருத்துக்களின் செறிவும் அமைந்த நூலாக நான்மணிக்கடிகை திகழ்கின்றது. கடவுள் வாழ்த்தாகச் சாற்றப்படும் இரண்டு பாடல்களையும் சேர்த்து 106 பாடல்கள் இதில் உள்ளன. மக்கள் இனிது வாழ்வதற்கு அமையும் வகையில் ஒவ்வொரு பாடலிலும் மணியான நான்கு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இவையனைத்தும் மிகவும் கருத்துச் செறிவுடையன. பாடலில் உள்ள கருத்துக்களை நான்கு வகையின் பாற்று என்று எடுத்தோதும் வகையில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்னும் வரிசையில் பயில்வோர் மனத்தில் நன்கு பதியுமாறு எண்கள் கொடுத்து அமைத்திருப்பது இந்நூலின் சிறப்பாகும். நினைவிற் கொள்ளத்தகும் சில இன்றியமையாத தொடர்களும் தனியே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

மீனாட்சி புத்தக நிலையம் :